மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர் சி இயக்கி வரும் நிலையில், ஆர்ஜே பாலாஜி அப்படத்தை கைவிட்டது ஏன் என்று அவரே பேசியிருக்கிறார்.
ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கிய மூக்குத்தி அம்மன் படம் 2020ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் நயன்தாரா மற்றும் பாலாஜி ஆகியோர் சேர்ந்து நடித்த காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றன. அதேபோல் அம்மாவாக நடித்த ஊர்வசி மற்றும் மூன்று அக்கா தங்கைகளின் எதார்த்தமான நடிப்புகள் தனித்துவமாக இருந்தன. ஒரு நல்ல என்டெர்டெயின்மென்ட் படமாகவும், அதேசமயம் ஒரு நல்ல கருத்தைக் கொடுத்த படமாகவும் மூக்குத்தி அம்மன் இருந்தது.
இப்படம் கொரோனா காலத்தில் வந்ததால், ஒடிடியில் மட்டுமே வெளியானது. இருப்பினும், ரசிகர்களின் பேராதரவை பெற்றது. இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை குறித்த பேச்சு எழுந்தது. முதலில் இதன் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி என்றும், நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளார் என்றும் சொல்லப்பட்டது.
ஏனெனில், ஆர்ஜே பாலாஜி இதற்கு ஒரு பெரிய சம்பளத்தை கேட்டு பிரச்சனை செய்ததாக வதந்திகள் பரவின. இதனால் அந்த டீம் அப்படியே விலகியது. தற்போது இந்தப் படத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார். மேலும் நயன்தாரா நடித்து வருகிறார்.
இப்படியான நிலையில், ஏன் மூக்குத்தி அம்மன் 2 படத்தை தான் இயக்கவில்லை என்று வெளிப்படயாக பேசியிருக்கிறார்.
“ மூக்குத்தி அம்மன் 2 படம் எடுப்பதற்காக நாம் வேறு ஒரு கதைக்களத்தை வைத்திருந்தேன். அது அவர்களுக்கு செட் ஆகவில்லை. அதனால் அவர்கள் சுந்தர் C சாரிடம் கொடுத்து எடுக்க சொன்னார்கள். இதில் எனக்கு சந்தோஷம்தான். இந்த காரணத்தினால் தான் மூக்குத்தி அம்மன் 2 படம் எடுப்பதற்கு எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை.” என்று பேசியிருக்கிறார்.
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகள் இருந்தாலும், ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கலாம் என்று ரசிகர்கள் சற்று வேதனையும் தெரிவிக்கிறார்கள்தான்.