

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடிக்கும் தாய்க்கிழவி 20 /2/2026 முதல் வெளியாவதாக இருந்தது.ஆனால் ஒரு வாரம் தள்ளிப்போகிறது.27/2/2026 முதல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1. மை டியர் டாலி (My Dear Dolly)
இது ஒரு வித்தியாசமான காதல் கதை.நாயகன்,நாயகி இருவருக்கும் 10 வருடங்கள் வயது வித்தியாசம்.இருவரும் ஒரே ஆபிசில் பணி புரிகிறார்கள்.எலியும் ,பூனையும் போல் ,டாம் அண்ட் ஜெர்ரி போல் இருவரும் அடித்துக்கொள்கிறார்கள்.இருவர் வீட்டிலும் தனித்தனியே திருமணம் செய்து கொள்ள சொல்லி அழுத்தம் தருகிறார்கள்.அதனால் இருவரும் ஒரு செட்டப் மேரேஜ் ஒப்பந்தம் செய்து கொண்டு போலியாக தம்பதி போல் காட்டிக்கொள்கிறார்கள்.ஒரு ஆறு மாதம் அப்படி ஜோடி ஆக நடித்துப்பின் பிரிந்து விடலாம் என்பது அவர்களுக்குள் இருக்கும் அக்ரீமெண்ட்.
ஆனால் நிஜமாகவே சண்டை வர இருவரும் பிரிகிறார்கள்.நாயகியைப்பிரிந்த நாயகன் நாயகி போலவே தோற்றம் கொண்ட பொம்மையுடன் வாழ்கிறான்.அப்போது திடீர் என நாயகி அங்கே வருகிறாள்.இதற்குப்பின் நடக்கும் திருப்பங்கள் தான் மீதி திரைக்கதை
நடிகர்கள்: வி.ஜே. பப்பு (VJ Pappu), அனுபமா ஆனந்த்ராஜ், ராஜவேலு, பேபி தீக்ஷிதா.
இயக்கம்: ஏ. அரவிந்த் ராஜ்.
இசை: பாசில் (M. Fazil).
ரீ-ரிலீஸ் (மீண்டும் வெளியாகும் படங்கள்):
முன்பெல்லாம் ஆடிக்கு ஒரு முறை, அமாவாசைக்கு ஒரு முறை ரீ ரிலீஸ் படங்கள் வந்தன.இப்போது வாரா வாரம் ஆரவாரம் என சொல்லும்படி ரெகுலராக பழைய படங்கள் ரீ ரிலீஸ் ஆகின்றன.
தெறி: 'ஜனநாயகன்' தள்ளிப்போனபோது எஸ். தாணு 'தெறி' ரீ-ரிலீஸ் ஆவதாக அறிவித்தார். ஆனால் அது இப்போது பிப்ரவரி 27-ஆம் தேதி வெளியாகிறது
கில்லி - விஜய் படங்களிலேயே செம ஸ்பீடு திரைக்கதை தரணி இயக்கத்தில் வந்த கில்லி தான்.அது ரீ-ரிலீஸ் ஆகிறது..பிரகாஷ் ராஜ் சொல்லும் ஹாய் செல்லம் என்ற வசனம் செம பேமஸ்.அப்படிப்போடு போடு போடு பாட்டு பட்டி தொட்டி எல்லாம் முழங்கிய ஹிட் பாட்டு.
நாயகனுக்கு அறிமுகமே இல்லாத நாயகியை வில்லனிடம் இருந்து நாயகன் காப்பாற்றுவது தான் கதை.படம் பூரா ஓடிக்கொண்டே இருப்பார்கள்.வில்லன் க்ரூப் துரத்திக்கொண்டே இருக்கும்.இந்தப்படத்தில் கபடி வீரராக விஜய் வருவார்.விஜய் படத்திலேயே மாஸ் ஓப்பனிங் சீன் இதில் இருக்கும்.முக்காடு போட்டபடி ஜாகிங் செய்து கொண்டே இண்ட் ரோ ஆகும்போது தியேட்டரில் அப்ளாஸ் அள்ளும்.2004 ம் ஆண்டு வெளியான இந்தப்படம் ஒக்கடு என்ற தெலுங்குப்படத்தின் அபிசியல் ரீமேக் ஆகும்.8 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப்படம் 42 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.ரி-ரீலிசில் 24 கோடி வசூலித்தது.இப்போது மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது
துணிவு :
எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த 'பேங்க் ராபரி' த்ரில்லர் படம். 2023 பொங்கலுக்கு விஜய் நடித்த 'வாரிசு' படத்திற்குப் போட்டியாக இது வெளியானது.வாரிசை விட துணிவு ஹிட் தான் என்றாலும் சதுரங்க வேட்டை. லெவல் இல்லை
பேங்க் லோன் மோசடிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய படம்.அஜித்துக்கு இதில் ஜோடி ,டூயட் இல்லை என்றாலும் அஜித் ரசிகர்கள் கொண்டாடிய படம் இது
எச். வினோத் இயக்கும் படங்களின் டைட்டில் பொதுவாக நீளமாக இருக்கும்.சதுரங்க வேட்டை,தீரன் அதிகாரம் 1 ,நேர் கொண்ட பார்வை என்ற வரிசையில் வந்தவை அவர் படங்கள்.3 எழுத்தில் வைக்கப்பட்ட சின்ன டைட்டில் இது தான் முதல் முறை.160 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த்ப்படம் 385 கோடி வசூலித்தது.
மஞ்சு வாரியர் நடிப்பு இதில் பேசப்பட்டது.2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது...
சூது கவ்வும் :
விஜய் சேதுபதி நடிப்பில் 2013ல் வெளியான காமெடி கலந்த க்ரைம் திரில்லர் படம் இது.நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சி கலைஞர் டிவியில் ரொம்பவே பேமஸ்.'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சி மூலம் அறிமுகமான நலன் குமாரசாமியின் முதல் படம் இது.
நாயகன் மோசடி வேலைகள் செய்யும் திருடன்.அவனுடன் 3 மோசடிப்பேர்வழிகள் சேர்ந்து கொள்ள ஒரு அரசியல் வாதியின் வாரிசைக்கடத்திப்பணம் பறிக்க திட்டம் போடுகிறார்கள்.எதிர்பாராத திருப்பம் ஆக யாரைக்கடத்த பிளான் போட்டார்களோ அவனே இந்த கேங்க் உடன் சேர்ந்துகொள்கிறான்.இதற்குப்பின் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதித்திரைக்கதை.
அசோக் செல்வன்,சஞ்சிதா செட்டி மற்றும் பலர் நடித்த இந்தப்படம் வெளியான காலக்கத்தில் செம ஹிட் ஆனது. 2013ல் ரிலீஸ் ஆன படம் இது