விஜய் விரும்பி சாப்பிடும் மதிய உணவு இதுதான்.! மமிதா பைஜூ பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்.!

Mamitha baiju speaks about vijay
Mamitha baiju
Updated on

ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சினைகளால் இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது. படம் தற்போது ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டிருப்பதால், விரைவில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்த மமிதா பைஜூ, சுவாரஸ்யமான தகவல் ஒன்றைப் பகிர்நதுள்ளார்.

மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது தமிழ் சினிமாவிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார் மமிதா பைஜூ. கடந்தாண்டு வெளியான டியூட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த மமிதா பைஜூக்கு, தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

திரைத்துறைக்கு அறிமுகமாகிய சில ஆண்டுகளிலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் மமிதா பைஜு நடித்து விட்டார். விஜயுடன் ‘ஜனநாயகன்’, சூர்யாவுடன் ‘கருப்பு’ மற்றும் தனுஷுடன் ‘கர’ ஆகிய திரைப்படங்களில் நமீதா பைஜூ நடித்துள்ளார். இந்த மூன்று திரைப்படங்களும் இன்னும் திரைக்கு வராத நிலையில், அனைத்து படங்களும் வெற்றி படங்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மமிதா பைஜூ, நடிகர் விஜய் பற்றி பேசி இருப்பது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் விஜய் குறித்து மமிதா பேசுகையில், “ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு எப்போதுமே நேரம் தவறாமல் விஜய் சார் வந்து விடுவார். பேசுவதற்கு சற்று தயங்கினாலும், மிகவும் இனிமையாக பேசுவார். நாம் அவரிடம் சொல்கின்ற சிறிய விஷயங்களை கூட நினைவில் வைத்துக் கொண்டு, மீண்டும் நம்மை சந்திக்கும் போது அதைப்பற்றி கேட்பார்.

எனக்கெல்லாம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்ததே நினைவில் இருக்காது. ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்ததை கூட நினைவில் வைத்துக் கொண்டு, விஜய் சார் என்னிடம் கேட்டிருக்கிறார். மதிய உணவிற்கு விஜய் சாலமீனை விரும்பி சாப்பிடுவார்.

அடுத்தடுத்து விஜய், சூர்யா மற்றும் தனுஷ் சாருடன் நடித்தது ஒரு கனவு போல இருக்கிறது. இதையெல்லாம் கடவுள் எனக்கு கொடுத்ததற்கு நன்றி” என மமிதா பைஜூ தெரிவித்துள்ளார்

இதையும் படியுங்கள்:
இனி எழும்பூரில் ரயில்கள் இங்கு தான் நிற்கும்.! மின்சார ரயில் சேவையில் பெரிய மாற்றம்.!
Mamitha baiju speaks about vijay

கடந்த 2017-ம் ஆண்டு ‘சர்வோபாரி பாலக்கரன்’ என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் மமிதா பைஜூ. அதன் பிறகு ஆபரேஷன் ஜாவா, கோ கோ, சூப்பர் சரண்யா மற்றும் பிரேமலு ஆகிய படங்களில் நடித்தார்.

குறிப்பாக பிரேமலு படத்தில் அவரது கதாபாத்திரம் சிறப்பாக இருந்தது. இந்தப் படம் அதிக வசூல் செய்த மலையாளத் திரைப்படங்களில் ஒன்றாக சாதனை படைத்தது. மேலும் இந்த படம் தான் இவரை ரசிகர்களிடம் விரைவில் கொண்டு போய் சேர்த்தது என்று சொல்லலாம்.

இதையும் படியுங்கள்:
ரூ.16 லட்சம் உறுதி..!பெண்களுக்கான LIC-யின் ஸ்பெஷல் திட்டம்.!
Mamitha baiju speaks about vijay
logo
Kalki Online
kalkionline.com