Kadhalar dhinam - mounam pesiyadhe - minnale
Re release Movies

காதலர் தினம் முதல் மௌனம் பேசியதே வரை.. வரிசையாக ரசிகர்களுக்கு ட்ரீட்.. ரீ ரிலீசாகும் படங்கள் லிஸ்ட்..!

Published on

ரீ ரிலீஸ் கலாச்சாரம் உருவெடுத்து வரும் நிலையில், இந்த வாரம் காதலர் தின ஸ்பெஷலாக 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளது.

அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை தியேட்டர்களில் படங்களை பார்க்கும் ரசிகர்களின் கூட்டம் குறைந்த பாடில்லை. ஒரே படத்தை மீண்டும் மீண்டும் தியேட்டர்களில் பார்க்கும் ரசிகர்கள் கூட இருக்கத்தான் செய்கிறார்கள். இதனால் தான் அந்த காலத்தில் ஒரு வருடம் வரை ஒரு படம் ஓடி இருக்கிறது. ஆனால் டிஜிட்டல் உருவெடுத்த பிறகு படங்கள் ஓடும் நாட்கள் குறைந்துவிட்டது. படம் ரிலீஸ் ஆன சில மாதங்களிலேயே ஓடிடியில் வெளியாகிவிடுகிறது. தியேட்டர்களை போலவே ஓடிடி ரசிகர்களும் சமீபகாலமாகவே அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.

பலரும் திரையரங்கில் படம் பார்த்தாலும் ஓடிடி ரிலீஸிறாக காத்து கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்கையில், 90ஸ், 80ஸ் காலக்கட்டத்தில் ஹிட் அடித்த படங்கள் சமீபகாலமாகவே ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நடிகர்கள் பிறந்தநாளுக்கும் அவர்களின் ஹிட் படங்கள் ரிலீஸ் செய்யும் கலாச்சாரம் உருவாகி வருகிறது. பழைய படத்தை ரீ ரிலீஸ் செய்வதால் எந்த செலவும் இல்லாமல் அதிக பணம் வசூலிக்க முடியும்.

இப்படி இருக்கையில் வருகின்ற 14ஆம் தேதி காதலர் தினம் வருவதால், காதலர்கள் தங்களின் காதலை வெளிப்படுத்தவும், கொண்டாடவும் காத்திருப்பார்கள். இவர்களுக்காகவும், இளைஞர்கள் குதூகலிக்கவும் சில ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. அது என்னென்ன படங்கள் என்று பார்க்கலாம்.

நடிகர் குணால், நடிகை சோனாலி நடிப்பில் இயக்குநர் கதிர் இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் ரொமான்டிக் திரைப்படம் 'காதலர் தினம்'. இந்த சூப்பர் ஹிட் திரைப்படம் வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று தியேட்டரில் ரீ ரிலீஸாகவுள்ளது.

மாதவன், ரீமா சென், அப்பாஸ் ஆகியோர் நடிப்பில் 2001ல் வெளிவந்த காமெடி ரொமான்டிக் காதல் திரைப்படம் 'மின்னலே'. இந்த சூப்பர் ஹிட் திரைப்படம் வரும் பிப்ரவரி 13ம் தேதி தியேட்டரில் ரீ ரிலீஸாகவுள்ளது.

இயக்குநர் அமீர் இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடிப்பில் 2002ல் வெளிவந்த ரொமான்டிக் காதல் திரைப்படம் 'மௌனம் பேசியதே'. 90ஸ் கிட்ஸ் கொண்டாடிய இப்படம் வரும் பிப்ரவரி 13ம் தேதி தியேட்டரில் ரீ ரிலீஸாகவுள்ளது.

90ஸ் காலக்கட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படங்கள் இன்று ( பிப்ரவரி 13) வெளியாகவுள்ளது. எந்த அளவிற்கு வசூலில் களைக்கட்டவுள்ளது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com