சரிவில் விஜய் டிவி சீரியல்கள்... வந்தாச்சு TRP ரேட்டிங்... முதலிடத்தில் எந்த சீரியல் தெரியுமா?

Vijay TV serials
Vijay TV serials

இந்த வருடத்தின் 18-ஆவது வாரத்தில் டாப் 10 இடங்களை பிடித்த டாப் 10 சீரியல்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஊர்களில் மட்டுமே நகரத்திலும் கூட சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். இந்த ரசிகர்கள் என்றுமே மாற மாட்டார்கள். சீரியல்களுக்கு எல்லா ஊர்களிலும் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். வயதானவர்கள் வீட்டில் இருப்பவர்களே சீரியல் பார்ப்பார்கள் என்று நம்மிடம் ஒரு பிம்பம் உள்ளது. ஆனால், வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள், கல்லூரி செல்லும் ஆண்கள், பெண்கள் என பல தரப்பட்ட மக்களும் சீரியல் பார்த்து வருகின்றனர். இந்த சீரியல்கள் பார்வையாளர்களின் எண்ணிக்கையின் படி வாரம் வாரம் டிஆர்பி ரேட்டிங் வெளியாகும். அதாவது எந்த சீரியல் அதிகம் பார்க்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் சீரியல்கள் லிஸ்ட் வெளியாகும் அப்படி இந்த வருடத்தின் 18-ஆவது வாரத்தின் சீரியல் டிஆர்பி ரேட்டிங் பட்டியலை பார்க்கலாம்.

இந்த வாரம் வழக்கம் போல், 'சிங்கப்பெண்ணே' சீரியல் 9.25 TRP புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது. அதே போல் இந்த வாரம் TRP ரேட்டிங்கில் 8.44 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது கயல் சீரியல். பல நாட்களாக பின்னுக்கு தள்ளப்பட்ட எதிர்நீச்சல் சீரியல் ஒருவழியாக முட்டி மோதி 8.6 TRP புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது எதிர்நீச்சல் தொடர்.

இதையும் படியுங்கள்:
கேப்டனுக்கு பத்ம பூஷன் விருது... கண்கலங்கிய பிரேமலதா விஜயகாந்த்!
Vijay TV serials

இதை தொடர்ந்து, 8.05 TRP புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது வானத்தை போல தொடர்.மேலும் 5வது இடத்தில் 7.24 TRP புள்ளிகளுடன் சிறகடிக்க ஆசை சீரியலும், 6வது இடத்தில் 6.82 TRP புள்ளிகளுடன் சுந்தரி சீரியலும் உள்ளது. தொடர்ந்து கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னர் புதிதாக துவங்கப்பட்ட மல்லி சீரியல், 6.36 புள்ளிகளுடன் 7வது இடத்தை பிடித்துள்ளது.

அடுத்து 8வது இடத்தில், 6.27 TRP புள்ளிகளுடன் பாக்கியலட்சுமி சீரியலும், 9வது இடத்தில், பாண்டியன் ஸ்டோர் 2' சீரியலும், 10ஆம் இடத்தில், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'கார்த்திகை தீபம்' தொடரும் இடம்பெற்றுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com