இந்த வாரம் திரைக்கு வரும் படங்கள்..! 6 படங்கள்... 6 கதைகள்!

திரையரங்குகளில் இந்த வாரம் 6 புதிய படங்கள்!: 'ராம்லீலா' முதல் 'இன்சிடியஸ் 6' வரை - கலக்கல் ரிலீஸ் லிஸ்ட்!
இந்த வாரம் தியேட்டர் ரிலீஸ்
இந்த வாரம் தியேட்டர் ரிலீஸ்source:AI image
Updated on

1.ராம்லீலா : தமிழ். ரொமாண்டிக் காமெடி டிராமா

ram leela
ram leelasource:youtube

தீபிகா படுகோனே+ ரன்வீர் சிங் ஜோடியாக நடித்த ஹிந்திப்படமான ராம் லீலா (2013) வுக்கும் ,இந்தப்படத்துக்கும் சம்பந்தமில்லை. இரண்டும் வேறு வேறு கதை.

பாடல் ஆசிரியரும், டிவி நடிகராகவும் இருந்த ரியோ ராஜ் பல படங்களில் நடித்திருந்தாலும் ஜோ, ஆண் பாவம் பொல்லாதது படத்தின் வெற்றி மூலம் பலருக்கும் தெரிந்த ஹீரோ ஆனார்.

இந்த படத்தில் ரியோ ராஜிற்கு ஜோடியாக வர்த்திகா ஜெயின் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது; காரணம் இந்தப்படத்தில் நாயகி மாலை 6 மணிக்குப்பின் எங்கே இருக்கிறார்?என்ன செய்கிறார்?என்பது யாருக்கும் தெரியாமல் இருக்கிறது.சின்னத்தம்பி படத்தில் கவுண்டமணி மாலைக்கண் வியாதி உள்ளவராக இருப்பார்.ஒரு கோடி ரூபா கொடுத்தாலும் சாயங்காலம் 6 மணிக்கு மேல் வேலை செய்ய மாட்டேன் என்று காமெடி செய்வார்.அது போல் நாயகிக்கும் மாலைக்கண் குறைபாடு இருக்கலாம்.

அல்லது சமீபத்தில் வெளியான காமெடிப் படமான ‘டபுள் ஆக்குபன்சி’ படத்தில் வருவது போல் காலை 6 டூ மாலை 6 பெண்ணாகவும், மாலை 6 டூ காலை 6 ஆணாகவும் மாறுபவராக இருக்கலாம். ட்ரெய்லரில் வரும் காட்சிகள் இந்த மாலை 6 மணிப் பிரச்சனையால் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் மெயின் எனத் தெரிகிறது.காமெடிக்கு முனிஷ்காந்த், கிளாமருக்கு மாளவிகா அவினாஷ் களம் இறங்குகிறார்கள். அங்கித் மேனன் இசை அமைத்திருக்கிறார்.

2. மொத ராத்திரி - ரொமாண்டிக் காமெடி டிராமா :

motha rathiri
motha rathiri source:youtube

டைட்டிலிலேயே கே.பாக்யராஜ் பாணியில் இது ஒரு ஜனரஞ்சக நகைச்சுவைப் படம் என்பது தெரிந்து விடுகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அல்ட்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி (2024),கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்-மமிதா பைஜூ நடித்த ட்யூட் என்று தொடர்ந்து இரு வெற்றிப்படங்களை தயாரித்த தெலுங்குப்பட நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மூன்றாவதாக தயாரிக்கும் படம் இது.ஹாட்ரிக் ஹிட் அடித்து விடும் என்று தோன்றுகிறது.

ராஜா கருப்பசாமி இயக்க ரிஷிகாந்த்+அனஷ்மா ஜோடியுடன் அனில்குமார் ,சேத்தன்,பக்ஸ் பெருமாள்,பானுப்ரியா,இயக்குநர் ஏ வெங்கடேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

திருமணமான நாயகன் - நாயகி வாழ்வில் முதல் நாள் இரவு நடக்கும் காமெடி சம்பவங்களே கதை.ட்ரெய்லரை பார்க்கும்போது காமெடி தூக்கலாக இருப்பது தெரிகிறது.

ரசித்த வசனங்கள் :

1. ஊர்ல பாதிப்பேர் ஏன் கல்யாணம் பண்றோம்?எதுக்குக்கல்யாணம் பண்றோம்னு தெரியாமயே கல்யாணம் பண்ணிக்கறாங்க

2. சலித்துப்போனாலும் சகித்துப்போற மாதிரி இருக்கனும்,அதுதான் லவ்.

3. ஒரு சில சலுகைகள் புது மாப்பிள்ளைக்கு மட்டும் தான் கிடைக்கும்.அப்படிப்பட்ட சலுகைகளில் ஒன்றுதான் இந்த மொத ராத்திரி.

4. சாந்தி முகூர்த்த ரூமில் லைட் இன்னமும் எரியுது?

5. மாப்பிள்ளைக்கு இருட்டுன்னா பயமோ என்னவோ?

ஜமா படத்தில் சேத்தன் பிரமாதமாக நடித்திருந்தார்.ட்ரெய்லரில் நாயகனுக்கு அடுத்தபடியாக சேத்தனுக்குத்தான் சீன்கள் அதிகம்.நல்ல முக்கியத்துவம் உள்ள கேரக்டராக தெரிகிறது.

திருமண விசெஷத்துக்கு வந்த நெருங்கிய சொந்தஙகள் மணமக்களின் மொத ராத்திரியை கிண்டல் செய்வது போல காட்சிகள் சிரிக்க வைக்கின்றன.இது பேமிலி எண்டர்டெய்னிங்காக இருக்க வாய்ப்பு உண்டு.

3.இருமுடி கட்டு : தெலுங்கு/தமிழ் - ஆக்சன் டிராமா

irumudi kattu
irumudi kattusource:district

அஜித்குமார் + சிறுத்தை சிவா காம்போவில் வெளியான விஸ்வாசம் ஹிட் ஆனாலும் ஆனது,ஆளாளுக்கு அப்பா+மகள் பாசக்கதையில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

தெலுங்கு ஆக்சன் ஹீரோ ரவிதேஜா + ப்ரியா பவானி சங்கர் ஜோடியாக நடிக்கும் இருமுடி என்ற தெலுங்குப்படம் தமிழில் இருமுடி கட்டு என்ற டைட்டிலில் டப் ஆகி வெளியாகிறது.இயக்குநர் சிவா நிர்வாணா.இசை ஜி வி பிரகாஷ் குமார்.

ட்ரெய்லரிலிருந்து யூகித்த கதை :

நாயகன் முன்னாள் ரவுடி,இந்நாள் சரக்கு சங்கரலிங்கம்.திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது.மதுவுக்கு அடிமையான நாயகன் சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் இருக்கிறான்.விரதம் இருக்கும் நாளில் அடிக்க மாட்டான் என்று தெரிந்து வில்லன் கேங்க் நாயகனை வம்புக்கு இழுக்கிறது.நாயகனின் ரீ ஆக்சன் என்ன? என்பது மீதித்திரைக்க்தை.

ரசித்த வசனங்கள் :

1. ஊரையே கூட்டி சாப்பாடு போடறியே?என்ன விசேஷம் ?

என் பொண்ணு படிப்பை முடிச்சுட்டா.

இஞ்சினியரிங்கா? டாக்டரா?

அஞ்சாங்கிளாஸ்

2. ஒரு பொண்ணோட எதிர்காலத்துக்குப்பையன் தான் ஸ்ரீராமன் ரட்சகன்

3. பின்னால் ஒருத்தன் இருக்கான்,பொண்ணுங்க மேல கை வெச்சா குடலை உருவிடுவான்கற பயம் இல்லைன்னா நம்ம பொண்ணுங்களைக்காப்பாத்த முடியாது.

4. ஃப்ளாக் (Flag) தமிழ் - மெலோ டிராமா

ஃப்ளாக்
ஃப்ளாக்source: district

எஸ்.பி. பொன்சங்கர் இயக்கத்தில் மிக்கி மகிஜா, கிரி த்வாரிகிஷ், அமிர் மாலிக் நடித்த படம் இது..

‘சின்ன சின்ன ஆசை’ படத்தில் இந்திரன்ஸ் + ‘ரோஜா’ புகழ் மதுபாலா நடித்த படத்தின் கதை சாயல் தெரிகிறது. வாரணாசிக்கு டூர் வரும் நாயகி தன் குழுவை விட்டுப் பிரிய, நாயகன் நாயகிக்கு வழி காட்டி ஒரு நாள் முழுக்க துணையாக இருப்பதுதான் கதை.

அதே போல் இந்த ‘ஃப்ளாக்’ படத்தில் ஒரு சிறுவன் இந்தியாகேட் பார்க்க ஆசைப்பட்டு டெல்லி வர, நாயகி அவனுக்கு அடைக்கலம் தருகிறாள். அக்கா தம்பி பாண்டிங் உருவாகிறது.

இது ஒரு ஃபேமிலி மெலோ டிராமா.

குல்கந்த் குமார் அறிமுக நாயகனாக நடிக்கும் இந்தப் படம் 20/8/2026 முதல் வெளியாக இருக்கிறது.

5. ஏன் என்னை ஏதோ செய்தாய் : தமிழ் ரொமாண்டிக் டிராமா

Yen Ennai Edho Seidhai
Yen Ennai Edho Seidhaisource:dailythanthi

டி. ஆண்ட்டனி நாயகனாக நடித்து இயக்கி இருக்கும் படம் இது. சின்ன வயதிலேயே அம்மாவை இழந்த நாயகன் மதுப்பழக்கத்துக்கு அடிமை ஆகிறான். அவனது வாழ்வில் ஒரு காதல் வருகிறது. அது அவன் வாழ்க்கையையே புரட்டிப்போடுகிறது. இது தான் கதை.

ரசித்த வசனங்கள் :

1. கேர்ள் பிரண்ட் வேண்டாம்கறே,ஆனா டெய்லி ஒரு பொண்ணைக்கூட்டிட்டு வர்றே?

2. சில விஷயங்கள் கேட்க நல்லார்க்கு ம் ,ஆனா நடைமுறைக்கு ஒத்துவராது.

நாயகியாக நடித்தவர் பெங்காலிப்பெண்ணாக வித்தியாசமான நடிப்பில் மனம் கவர்கிறார்

படத்தின் பாடல்கள் வெளியாகி மணிரத்னம் ,கவுதம் மேனன் வாசுதேவ் படங்கள் போல இருக்கிறது என நெட்டில் டாக் உருவாகி வருகிறது.

6. Insidious: Out of the Further. அமெரிக்கன் மூவி/தமிழ் - சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரில்லர்

INSIDIOUS: OUT OF THE FURTHER
INSIDIOUS: OUT OF THE FURTHERsource:GeekTyrant

‘இன்சிடியஸ்: த ரெட் டோர்’ (2023) என்ற ஹிட் படத்தின் அடுத்த பாகம் இது. ‘இன்சீடியஸ்’ பிரான்ச்சிசில் இது ஆறாவது படம்.

அமெல்லா ஈவ் பிராண்டன் பெரா நடிப்பில் வெளிவரும் இந்தப் படத்தை இயக்கியவர் ஜேக்கப் சேஸ்.

படத்தின் ரன்னிங்க் டைம்: 106 நிமிடங்கள்.

ட்ரெய்லரே மிரட்டலாக உள்ளது.

‘அப்செஷன்’, ‘பேக்ரூம்ஸ்’ படங்களின் வரிசையில் மிரட்டலான படமாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

ஒரு சீனில் நாயகி பெட்ரூமில் படுத்திருக்க, ஏதோ சத்தம் கேட்டு எழும்போது அவளுக்கு அருகிலேயே ஒரு பேய் படுத்திருப்பது அதிர்ச்சியான ஜெர்க் காட்சி. வெண்டிலேட்டரில் நாயகி பூனை மாதிரி கை கால்களில் ஊர்ந்து போக, பேய் துரத்தும் சீன் செம.

ரசித்த வசனங்கள் :

1. இவ பிறந்த பின் என் வாழ்க்கையில் சந்தோஷமான தருணங்கள் தான், அந்தக்கனவுகள் வரும் வரை.

2. நான் என் பொண்ணை பயமுறுத்தறேன்.இதை எப்படி நிறுத்தறது?னு. யாராவது சொன்னா நல்லாருக்கும்

3. நம்ம உலகத்துக்கும் ,அடுத்த உலகத்துக்கும் பயணம் பண்றது முடியாதுனு நினைச்சுட்டு இருந்தேன்.

4. எங்களால முடியாதது உன்னால முடியுது.பேய்களை மனுசங்க உலகத்துக்கு உன்னால் கொண்டு வர முடியும்.

5. என்னால் அதைக்கண்ட் ரோல் பண்ண முடியலைன்னா என்ன ஆகும்,?

இதையும் படியுங்கள்:
மோகன்லால் மகள் விஸ்மயா அறிமுகமான 'துடக்கம்' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம்!
இந்த வாரம் தியேட்டர் ரிலீஸ்
logo
Kalki Online
kalkionline.com