விரைவில் OTT தளத்தில் வெளியாக உள்ள 'தக் லைஃப் (Thug Life)'!

thug life ott release date
thug life ott release date
Published on

thug life ott release date: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ,2025 அன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. தக் லைஃப் திரைப்படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் நவம்பர் 2022 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. நாயகன் திரைப்படத்திற்கு பிறகு மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு மணிரத்னம் - கமல் கூட்டணியில் திரைப்படம் உருவானதால் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. 

இந்த பெரிய கூட்டணியில் ஏ.ஆர்.ரஹ்மான், ரவி.கே.சந்திரன், ஶ்ரீகர் பிரசாத் உள்ளிட்ட திரைத்துறை ஜாம்பவான்கள் பலரும் இணைந்தனர். சரியாக ஒரு வருடம் கழித்து படத்திற்கு தக் லைஃப் என்று பெயர் சூட்டப்பட்டது. மணிரத்னம் திரை வரலாற்றில் முதல் முறையாக அவரது திரைப்படத்திற்கு இங்கிலீஷில் பெயர் வைத்திருந்தார்.

தக் லைஃப் திரைப்படத்தில் முதலில் கமலுடன் இணைந்து துல்கர் சல்மான் நடிப்பதாக இருந்தது. ஆனால்,  படப்பிடிப்புகள் நடைபெற மிகவும் தாமதமானதால் துல்கர் படத்திலிருந்து விலகினார். அடுத்ததாக ஜெயம் ரவி அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது, பிறகு அவரும் வெளியேற இறுதியாக சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர்களுடன் திரிஷா, அபிராமி, ஐஸ்வர்ய லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர் உள்ளிட்ட நடிகர்களும் படத்தில் நடித்துள்ளனர். 

தக் லைஃப் திரைப்பட வெளியீட்டுக்கு முன்பே அனைத்துப் பாடல்களும் பெரிய ஹிட்டாகின. அதே போல படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல், கன்னட மொழி பற்றி பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சை ஆகின.அதைத் தொடர்ந்து 

தக் லைஃப் திரைப்படத்திற்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது . இந்த சர்ச்சை காரணமாக, கர்நாடக முதல்வரில் இருந்து பல கன்னட அரசியல்வாதிகள் வரை கமலுக்கு எதிர்வினை ஆற்றினார்கள். 

இதையும் படியுங்கள்:
கட்டியவனுக்கு ஒரு வீடு; கட்டாதவனுக்கு பல வீடு!
thug life ott release date

பல எதிர்ப்புகளை முறியடித்து தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5, 2025 திட்டமிட்டப்படி உலகமெங்கும் வெளியாகியுள்ளது. ஆனால் , கர்நாடகாவில் மட்டும் திரைப்படத்தை வெளியிட தடை செய்யப்பட்டது. கமல் மன்னிப்பு கேட்கும் வரை அங்கு திரைப்படத்தை திரையிட முடியாது என்று கன்னட அமைப்பினர் தடுத்துள்ளனர். இது தொடர்பாக கர்நாடகா உய்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. 

மற்ற இடங்களில் வெளியான தக் லைஃப் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. 200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இதுவரை ₹96 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இன்னும் சில தினங்களில் இத்திரைப்படம் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் தக் லைஃப் திரைப்படத்தின் ஒடிடி ரிலீஸ் எப்போது என்று அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். படத்தில் ஓடிடி உரிமைகளை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. வரும் ஜூலை 3 ஆம் தேதி தமிழ் , தெலுங்கு , ஹிந்தி , கன்னடம் , மலையாளம் ஆகிய மொழிகளில் தக் லைஃப் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் கண்டுகளிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com