தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த ஒரு நடிகர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இப்போது இயக்குநராகவும், நடிகராகவும், தமிழ் சினிமாவில் சிறந்து விளங்கும் தனுஷின் முதல் அறிமுக படம் துள்ளுவதோ இளமை. இப்படத்தில் இவர் மட்டுமல்ல, நிறைய நடிகர்கள் அறிமுகமானார்கள். அதில் ஒருவர்தான் அபிநய். இவர் ஜங்ஷன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வந்தார். அதன்பின்னர், அமெரிக்கா மாப்பிள்ளை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சில காலமாக அவருக்கு எந்த சினிமா வாய்ப்பும் இல்லாததால் வறுமையில் இருந்து வந்தார். பல யூட்யூப் சேனல்களில் தன்னுடைய நிலைமை எடுத்து கூறி வந்தார்.
இப்படியான நிலையில்தான், அவர் உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அபிநய்க்கு லிவர் சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்ககப்பட்டுள்ள நிலையில் ₹28 லட்சம் சிகிச்சைக்காக தேவைப்படுவதாகவும் , உதவி வேண்டியுள்ளார்.
வயிறு வீங்கி ஆள் எலும்பும் தோலுமாக இருப்பதை பார்த்தவர்கள் துள்ளுவதோ இளமை பட ஹேன்ட்சம் பாய் அபிநய்யா இது என ஆச்சரியப்படுகிறார்கள்.
சினிமா வாய்ப்பு இல்லாதபோது மிகவும் கவலைக்கு போன அபிநய், பின் அவருடைய அம்மா இறந்த பின்னர் மேலும் உடைந்துவிட்டார். வீட்டிலிருந்த அனைத்தையும் விற்றுவிட்டு அம்மா உணவகத்தில்தான் சாப்பிட்டு வந்தாராம். ஒரு குட்டி ரூமில் தங்கி இருக்கிறார்.
துள்ளுவதோ இளமை படத்திற்கு பிறகு பிரபலமான அபிநய்க்கு, 8 பட வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், கண்மூடி திறப்பதற்குள் வந்த வாய்ப்புகள் அனைத்தும் போய்விட்டதாக வருத்தத்துடன் ஒருமுறை தெரிவித்தார்.
மொத்தமாக 8 பட வாய்ப்புகள் போன பிறகு தான் கட்டி வைத்த கோட்டை எல்லாம் இடிந்துவிட்டதாக தெரிவித்தார். அம்மா உணவகத்தில் சாப்பிட ஆரம்பித்த பிறகு தன் உடல் எடை வெகுவாக குறைந்துவிட்டதாக கூறினார்.
இவருக்கு சினிமா பிரபலங்கள் உதவி செய்வார்களா என்று ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர், குறிப்பாக தனுஷ் உதவி செய்யலாமே என்று பதிவிட்டு வருகிறார்கள்.