ப்ளூடூத் ஹெட்போன் பயன்படுத்துறீங்களா? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க!

bluetooth headphone
bluetooth headphone
Published on

தற்போது உள்ள காலக்கட்டத்தில் போன் பேசுவதற்கு, பாட்டு கேட்பதற்கு என்று அதிகமாக ப்ளூடூத் ஹெட்போனை மணிக்கணக்கில் பயன்படுத்துகின்றனர். இதனால் நமக்கு ஏற்படும் பக்கவிளைவுகள் அதிகம் என்று சொல்லப்படுகிறது. அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. அதிகநேரம் ஹெட்போன் பயன்படுத்தினால், காதினுடைய காற்றுப் பாதை அடைத்து காதிற்குள் பாக்டீரியா அதிகமாகிவிடும். இதனால் காதில் நோய்த்தொற்று, காது கேளாமல் போதல், Tinnitus போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

2. ஹெட்போனில் இருந்து வெளியாகும் காந்த அலைகள் மூளையை பாதித்து தலைவலியை உண்டாக்கும். மேலும் அதிக நேரம் ஹெட்போனை சத்தமாக வைத்துக் கேட்பதும் தலைவலி வருவதற்கு காரணமாக அமையும்.

3. அதிகநேரம் தொடர்ந்து ஹெட்போன் பயன்படுத்தினால், கவனச்சிதறல் ஏற்படும். எனவே, ஸ்கூல் மற்றும் காலேஜில் படிக்கும் மாணவர்கள் ஹெட்போனை அதிகம் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

4. ஹெட்போனில் இருந்து வரும் அதிகப்படியான சத்தம் இதயத்தை வேகமாக துடிக்க வைத்து நாளடைவில் இதயத்திற்கு பாதிப்பை உண்டாக்கும் என்று சொல்லப்படுகிறது.

5. ப்ளூடூத்தில் இருந்து வெளியாகும் radio frequency radiation ஆல் கேன்சர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான சான்றுகள் இன்னும் சரியாக நிரூபிக்கப்படவில்லை. எனவே, அதிக நேரம் போனில் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஸ்பீக்கரை பயன்படுத்துவது சிறந்தது.

6. கர்ப்பகாலத்தில் அதிகமாக ப்ளூடூத் ஹெட்போனை பயன்படுத்தும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு Attention deficit hyperactivity disorder (ADHD) என்னும் பிரச்னை ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.

7. ஹெட்போன்களை தலையில் அதிக நேரம் மாட்டிக்கொள்வதால் முடி உடைந்து முடிக்கொட்டுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ஒருநாளைக்கு குறைந்தது 60 முதல் 90 நிமிடங்கள் ஹெட்போனை தகுந்த இடைவேளையில்  பயன்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது.

8. குழந்தைகளுக்கு ஹெட்போன் பயன்படுத்த கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. குழந்தைகள் ஹெட்போன் பயன்படுத்துவதை விட அதிகம் கவனித்து கேட்பதற்கு கற்றுத்தருவது சிறந்தது.

9. ப்ளூடூத் ஹெட்போனில் குறைந்த அளவு ரேடியேஷன் இருந்தாலுமே, அதை அணிந்துக் கொண்டு தூங்குவது சிறந்ததல்ல. இதனால் காதில் நோய்த்தொற்று, காதில் உள்ள Ear wax அடைத்துக் கொள்ளுதல் ஏற்படும். குறைந்த அளவில் சத்தம் வைத்து வெகுநேரம் பயன்படுத்துவதும் காது கேளாமல் போவதற்கான சாத்தியக் கூறுகளை உண்டாக்கும். எனவே, முடிந்த அளவு பாடல்கள் கேட்க, போன் பேசுவதற்கு ஸ்பீக்கரை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லதாகும்.

இதையும் படியுங்கள்:
உடல்நலத்தை கெடுக்கும் இந்த 5 பழக்கங்கள் உங்களுக்கு இருக்கா?
bluetooth headphone

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com