தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவர் நடிகை ரோஜா. ஆந்திராவில் பிறந்து வளர்ந்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறந்தார். இவரது கணவர் ஆர். கே, செல்வமணி. 1992 ஆம் ஆண்டு இயக்குநர் ஆர்.கே. செல்வமணி இயக்கிய ‘செம்பருத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது வசீகரமான தோற்றத்தாலும், இயல்பான நடிப்பாலும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
தொடர்ந்து விஜயகாந்த், ரஜினிகாந்த், சரத்குமார், பிரபு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்தார். ‘உழைப்பாளி’, ‘வீரா’, ‘முத்து’, ‘அண்ணாமலை’ போன்ற படங்களில் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. குறிப்பாக, ஆக்ஷன் காட்சிகளிலும், நடனங்களிலும் தனது தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
வெள்ளித்திரையில் மட்டுமின்றி, சின்னத்திரையிலும் தனது ஆளுமையை நிரூபித்தார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், தொகுப்பாளினியாகவும் பங்கேற்று மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், ஒரு அரசியல்வாதியாகவும் தனது பயணத்தைத் தொடர்கிறார்.
ரோஜா கணவர் செல்வமணி 'புலன் விசாரணை’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘மக்கள் ஆட்சி’, ‘செம்பருத்தி’ போன்ற படங்கள் செல்வமணியின் திரைப்பயணத்தில் முக்கியமான படங்கள். இயக்குநர் என்பதைத் தாண்டி, தயாரிப்பாளராகவும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். நடிகை ரோஜாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ரோஜா, செல்வமணி இயக்கிய ‘செம்பருத்தி’ படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதியினர் திரையுலகில் ஒரு சிறந்த ஜோடியாகவும் திகழ்கின்றனர்.
செல்வமணி தனது குழந்தைகள் குறித்து பேசும்போது, “எனக்கு குழந்தைங்கனா உயிரு. 12 குழந்தைகள பெத்துக்கனும், 12 குழந்தைகள தத்தெடுக்கனும் ஆசை. அந்த 12 குழந்தைகள உலகத்துல இருக்குற ஒவ்வொரு நாடுகளிலிருந்தும் தத்தெடுக்கனும்னு ஆசைப்பட்டேன். எங்க பிள்ளைகளுக்காக ஒரு ஸ்கூலே இருக்கனும்னு சொன்னேன். அதுதான் என் கனவு.” என்றார்.