இன்று வெளியாகும் 7 படங்கள்: எதிர்பார்ப்பில் ‘4’... வெற்றி யாருக்கு?

இன்று வெளியாகும் 7 படங்களில் 3 பிஎச்கே, பறந்து போ, ஜுராசிக் வோர்ல்டு ரீ பெர்த், பீனிக்ஸ் போன்ற படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகளவு உள்ளது.
3 பிஎச்கே, பறந்து போ, ஜுராசிக் வோர்ல்டு ரீ பெர்த், பீனிக்ஸ்
3 பிஎச்கே, பறந்து போ, ஜுராசிக் வோர்ல்டு ரீ பெர்த், பீனிக்ஸ்

வெள்ளிக்கிழமை என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஏனெனில் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் புதுப்புதுப்படங்கள் வெளியாகின்றன. இன்று வெளியாகும் 7 படங்களில் 3 பிஎச்கே, பறந்து போ, ஜுராசிக் வோர்ல்டு ரீ பெர்த், பீனிக்ஸ் போன்ற படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகளவு உள்ளது. அந்த வகையில் இன்று எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை சிறிய தொகுப்பாக பார்க்கலாம்.

1. 3 பிஎச்கே

3 பிஎச்கே
3 பிஎச்கே

‘8 தோட்டாக்கள்’ படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத், சைத்ரா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது ‘3 BHK’ திரைப்படம். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில், மிடில் கிளாஸ் குடும்பம் சொந்த வீடு கட்ட எவ்வளவு சிரமங்களையும் அவமானத்தையும் சந்திக்கின்றனர் என்பதை மையமாக வைத்து கதைகளம் உருவாக்கப்பட்டுள்ளது.

2. அஃகேனம்

அஃகேனம்
அஃகேனம்

ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் அருண்பாண்டியன் தயாரித்து, நடித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி பாண்டியன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் பிரவீன் ராஜா, ஆதித்யா ஷிவ்பிங்க், ரமேஷ் திலக், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உதய் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைக்க, விக்னேஷ் கோவிந்தராஜன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

3. அனுக்கிரகன்

அனுக்கிரகன்
அனுக்கிரகன்

சுந்தர் கிரிஷ் இயக்கத்தில் முரளி ராதாகிருஷ்ணன், ஸ்ருதி ராமகிருஷ்ணன், தீபா உமாபதி, மாஸ்டர் ராகவன் முருகன், விஜய்கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
இன்று வெளியாகும் தனுஷின் ‘குபேரா’ படத்துடன் மோதும் படங்கள்...
3 பிஎச்கே, பறந்து போ, ஜுராசிக் வோர்ல்டு ரீ பெர்த், பீனிக்ஸ்

சக்தி சினி புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ரேஹான் இசையமைத்துள்ளார். மகன் தனது தந்தையின் கனவை நனவாக்குவதற்கு காலத்தில் பின்னோக்கி பயணிக்கும் ஒரு காலப் பயணக் கதை களத்தில் எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் உணர்ச்சி ஆழத்தை வைத்து உருவாகியுள்ளது இந்த படம்.

4. குயிலி

குயிலி
குயிலி

அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள 'குயிலி' திரைப்படத்தில் லிசி ஆண்டனி, ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜோ ஸ்மித்தின் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பிரவீன் ராஜின் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரு தாயின் வைராக்கியம் மிக்க வாழ்க்கை போராட்டத்தை எடுத்துக்காட்டும் விதமாகவும் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

5. பறந்து போ

பறந்து போ
பறந்து போ

இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பறந்து போ'. சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஒளிப்பதிவை ந.கே.ஏகாம்பரம் மேற்கொண்டுள்ளார். தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உணர்வுகளைப் பேசும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை GKS Bros Production, Jio Hotstar, Seven Seas, Seven Hills Productions ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது.

6. பீனிக்ஸ்

பீனிக்ஸ்
பீனிக்ஸ்

அனல் அரசு இயக்கத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா முதன்முதலாக ஹீரோவாக நடித்திருக்கும் படம் பீனிக்ஸ். பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், நடிகர் சம்பத், நடிகை தேவதர்ஷினி மற்றும் பலர் நடிக்க, சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ஆக்சன் கதைக் களத்தில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜுராசிக் வோர்ல்டு ரீபெர்த்

7. ஜூராசிக் வேர்ல்டு ரீபெர்த்

ஜுராசிக் வோர்ல்டு ரீபெர்த்
ஜுராசிக் வோர்ல்டு ரீபெர்த்

உலகளவில் வரவேற்பை பெற்ற ஜூராசிக் வேர்ல்டு திரைப்பத்தின் புதிய பாகம் ‘ஜூராசிக் வேர்ல்டு ரீபெர்த்’ இந்தியாவில் இன்று வெளியாகிறது. பிரபல ஹாலிவுட் இயக்குனரும், எழுத்தாளருமான டேவிட் கோப் கதை எழுத, கரேத் எட்வர்ட்ஸ் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

இதையும் படியுங்கள்:
ஜூராசிக் வேர்ல்டு ரீபர்த்: மிக மோசமான டைனோசர்களில் மோசமானவை இங்கே விடப்பட்டுள்ளன!
3 பிஎச்கே, பறந்து போ, ஜுராசிக் வோர்ல்டு ரீ பெர்த், பீனிக்ஸ்

யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஜோனதன் பெய்லி, அவெஞ்சர்ஸ் நாயகி ஸ்கார்லெட் ஜோன்ஸன், மானுவல் கார்சியா, மஹெர்ஷாலா அலி, லூனா பிளேஸ், டேவிட் ஐகோனோ ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com