
சினிமா துறையை சேர்ந்த பிரபலங்கள் எந்த விஷயங்களை செய்தாலும் அது தலைப்பு செய்தியாக மாறிவிடும். அந்த வகையில் தற்போது ஹாலிவுட் பிரபலம் ஒருவர் அறிவித்த அவரது திருமணம் குறித்த அறிவிப்பு தான் தற்போது தலைப்பு செய்தியாக இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.
உலகளவில், பிரபலமான நடிகராக வலம் வருபவர் டாம் க்ரூஸ். இவருக்கும் ஹாலிவுட்டில் மட்டுமின்றி உலகளவில் அதிகளவு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதற்கு காரணம் இவரது அதிரடியான நடிப்பில் வெளிவந்த ‘மிஷன் இம்பாசிபில்’ திரைப்படம் என்று சொல்லலாம். அந்தளவிற்று அந்த படம், பல கோடி ரசிகர்களை பெருவதற்கு பெரும் காரணமாக இருந்தவர், நடிகர் டாம் க்ரூஸ். அதுமட்டுமின்றி அந்த படம் அவருக்கு பெயரையும் புகழையும் உலகளவில் பெற்றுத்தந்தது. இவர் நடிப்பில் கடைசியாக Mission: Impossible The Final Reckoning திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
63 வயதாகும் டாம் க்ரூஸை இன்று பார்த்தாலும் அவரது ரசிகர்கள் ‘இவருக்கு மட்டும் எப்படி வயதே ஆகாமல் இருக்கிறது..?’ என்பதையே பெருங்கேள்வியாக வைக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, எவ்வளவு உயரமாக இருந்தாலும், எவ்வளவு பெரிய பில்டிங் ஆக இருந்தாலும் அதிலிருந்து தாவி குதித்து சாகசம் செய்யும் டாம் க்ரூஸ் இந்த வயதிலும் தான் நடிக்கும் எந்த படங்களுக்கும் டூப் போடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை அனா டி அர்மாஸும், டாம் க்ரூஸும் கடந்த சில ஆண்டுகளாகவே டேட்டிங் செய்து வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இவர்கள் இருவரும் திருமணத்திற்கு தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில், ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்துகொண்டுள்ள நடிகர் டாம் க்ரூஸ், தற்போது நான்காவது திருமணத்திற்கு தயாராகிவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் இருவரும் எங்கு திருமணம் செய்து கொள்ளலாம் என்பது குறித்தும், யாரையெல்லாம் அழைக்கலாம் என்பது குறித்த கெஸ்ட் லிஸ்டையும் தற்போது தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகை அனா டி அர்மாஸும், டாம் க்ரூஸும் விண்வெளியில் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வருகின்றன. இதன் மூலம் விண்வெளியில் திருமணம் செய்துகொள்ளும் முதல் ஜோடி என்கிற பெருமையை பெற டாம் க்ரூஸ் ஆர்வமாக இருக்கிறாராம்.