இந்த வாரம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சிறப்பான வாரமாக அமைய உள்ளது. ஏனெனில் மிர்ச்சி சிவா நடிப்பில் 'சூது கவ்வும் 2', சித்தார்த் நடிக்கும் 'மிஸ் யூ', பரத் நடிக்கும் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' என 3 திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளன.
நாளை 3 திரைப்படங்கள் ரீலிஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். சரி இப்போ நாளை ரிலீஸ் ஆகும் திரைப்படங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
2013-ல் விஜய் சேதுபதி, அசோக் செல்வன் நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கண்டது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் 'சூது கவ்வும் 2' என உருவாகியுள்ளது. திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் சிவி குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். மிர்ச்சி சிவாவுடன் படத்தில் வாகை சந்திரசேகர், எம்எஸ் பாஸ்கர், ஹரீதா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படம் பிரகாசமான காமெடி படமாக அமைந்துள்ளதால் படத்தை திரையரங்குகளில் பார்க்கும் ரசிகர்களுக்கு என்ஜாய்மென்ண்டாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
‘சித்தா' படத்தின் வெற்றிக்கு பிறகு சித்தார்த் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கும் படம், 'மிஸ் யூ' நாளை ரீலிஸ் ஆகிறது. இதை 7 மைல்ஸ் பர் செகண்ட் நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கிறார். இந்த படத்தில் ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாகவும், ஜேபி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா மற்றும் பலரும் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். நீண்ட் நாட்களுக்கு பிறகு வெளிவரும் இந்த படம் சித்தார்த்துக்கு கைகொடுக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
நடிகர் பரத் கடைசியாக 'இப்படிக்கு காதல்' என்ற வெப் தொடரில் நடித்தார். தற்போது இயக்குனர் பிரசாத் முருகன் இயக்கத்தில் பரத் நடித்து நாளை ரீலிஸ் ஆகும் திரைப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நாயரும், பவித்ரா லட்சுமி, அபிராமி உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தினை தயாரிப்பாளர் கேப்டன் எம் பி ஆனந்த் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ராங்க்ளின் இசையமைத்துள்ளார். நாளை வெளியாகும் இந்த படம் பரத்துக்கு வெற்றிப்படமாக அமையுமா என்பதை ரசிகர்கள் தான் முடிவு செய்வார்கள்.
மேலும் ரஜினிகாந்த் பிறந்தநாளை (டிச.12) சிறப்பிக்கும் வகையில், அவர் நடித்த 'தளபதி' திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 1991ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த் சாமி, சோபனா உள்ளிட்டோர் நடித்து வெளியான இப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. 33 ஆண்டுகளைக் கடந்து தற்போது அவரின் பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் இந்த திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை (டிச 12) அவரது நடிப்பில் அடுத்து வரவுள்ள 'ஜெயிலர் 2', கூலி படத்தின் அறிவிப்புகள் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.