

சினிமாப் பிரியர்களுக்கு இந்த வருடம் கொண்டாட்டங்கள் அதிகம் இருக்கும். ஆம். இந்த ஆண்டு Netflix, HBO Max, Prime Video போன்ற OTT தளங்கள் புதிய தொடர்கள் மற்றும் சீசன் அப்டேட்களை வழங்குகின்றன. குறிப்பாக A Knight of the Seven Kingdoms மற்றும் The Boys போன்றவை உலக ரசிகர்களால் மிக அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றன.
இது 2026 ஆம் ஆண்டில் ஜனவரியில் வெளிவரும் மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் (Hollywood / OTT) உலகளாவிய படங்கள் டாப் 5 வரிசையில் உள்ள படங்கள் பற்றிய சிறு அலசல் இங்கு..
ஜனவரி -9
Greenland-2 Migration
Greenland 2 Migration என்பது 2020 ஆம் ஆண்டில் வெற்றிகரமான Greenland திரைப்படத்தின் தொடர்ச்சி திரைப்படம் ஆகும். இது போஸ்ட்-அபோகலிப்டிக் (உலகமொத்தப் அழிவுப் பின்) வகையைச் சேர்ந்த சர்வைவல்-சஸ்பென்ஸ் / ஆக்ஷன் திரைப்படமாகும். Greenland 2: Migration 2026 ஆம் ஆண்டு மக்களுக்கு உயிர் வாழும் போராட்டம் மற்றும் குடும்பத்தின் உறவுபூர்வமான பயணத்தை மையமாக கொண்ட திரைப்படம் என்பதால் ஆர்வம் கூடுகிறது. தவறாமல் முதல் படத்தை (Greenland) முதலில் பார்த்தால் 2-ஆம் பாகத்தின் கதை மேலும் சுவாரஸ்யம் தரலாம்.
ஜனவரி-16
The Bone Temple
The Bone Temple என்பது 28 Days Later வரிசையின் மற்றொரு தொடர்ச்சி ஆகும். இது 28 Years Later (2025) படத்தின் நேரடி தொடர்ச்சி படமாக உருவாகியுள்ளது. Rage Virus பூமியை தீவிரமாக பாதித்த பிறகு ஆண்டுகள் கடந்த பின் உயிர் வாழும் சிலர் இன்னும் மண்ணை quarantine-இல் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் பாதுகாப்பான தீவு வாழ்க்கையை அனுபவித்தாலும், அவர்கள் மீண்டும் பெரும் அபாயங்களை சந்திக்கின்றனர். இந்த அடிப்படையில் செல்லும் இப்படத்தின் கதை அதிகக் கொடிய மனித எதிர்பார்ப்புகளையும், புகழ்பெற்ற மனிதர்களின் கீழான நடத்தை மாற்றங்களை ஆராய்கிறது. குறிப்பாக இப்போது “அழிந்ததாகக்" கருதப்படும் சமூகத்தில் உயிர் வாழும் மனிதர்களின் மன மாறுபாடுகளை எடுத்துக்காட்டுகிறது. இது ஒரு த்ரில்லிங் படமாக மட்டுமின்றி மனித குணம் மற்றும் நெறியியல் கேள்விகளை எழுப்பும் படம் என்பதால் மக்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.
ஜனவரி- 23
Return to Silent Hill -3
Silent Hill திரைப்பட வரிசையின் மூன்றாம் படமான இதன் முன்பாகமான Silent Hill 2 (2001 ல்)வீடியோ கேம் உலகின் ஒரு Psychological Horror Masterpiece என பார்க்கப்படுகிறது. அதற்கான ஒரு தெளிவான, தொடர்ச்சியான திரைப்பட வடிவம் வேண்டுமென்ற ரசிகர்களின் கோரிக்கையை இது பூர்த்தி செய்கிறது. மேலும் இயக்குனர் Christophe Gans இயக்கத்தில் Silent Hill மீண்டும் உருவாகியுள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது. திரைப்படத்தில் சுவாரஸ்யமான Pyramid Head, Bubble Head Nurses போன்ற அற்புதமான பயங்கர உருவங்களையும் படம் மீண்டும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்பதை Trailer-கள் உறுதி செய்கிறது.
ஜனவரி-27
Wonder Man
இது ஒரு நேரடியான சூப்பர் மேன் ஹீரோ மீட்கும் படமாக அல்லாமல் திரைக்குப் பின்னால் உள்ள ஹாலிவுட் வாழ்க்கையை MCU கூறுகளுடன் இணைப்பது சிறப்பு. இதில் யாஹ்யா அப்துல்-மதீன் II, (Yahya Abdul-Mateen II) சைமன் வில்லியம்ஸாக நடிக்கிறார், அவர் தனது வளர்ந்து வரும் சக்திகள் மற்றும் தொழில்துறை குழப்பங்களைச் சமாளிக்கும் அதேவேளையில் தனது பெரிய வெற்றியைத் துரத்தும் ஒரு நடிகராக கலக்கியிருக்கிறார். ட்ரெவர் ஸ்லாட்டரியின் வருகை ஒரு பழக்கமான முகத்தையும் நகைச்சுவையான இயக்கத்தையும் சேர்க்கிறது. அனைத்து அத்தியாயங்களையும் ஒரே நேரத்தில் பார்த்து முடிக்கும் நல்ல தேர்வாக இருக்கும் இந்த சீரிஸ் என்பதாலும் சூப்பர் பவர் தரும் உணர்வு சிக்கல்களையும் கண்டு ரசிக்க ஏற்றதாக இருக்கும் இந்த சீரிஸ். மேலும் இதன் அடிப்படை நகைச்சுவைக்கதை மற்றும் ஹாலிவுட் நையாண்டிகளுடன் ட்ரெவர் ஸ்லேட்டரி போன்ற பழக்கமான முகங்களும் இருப்பது நிச்சயமாக ரசிக்க வைக்கும்.
ஜனவரி - 30
Send Help
The Evil Dead, Drag Me to Hell, Spider-Man படங்களுக்கு பிரசித்திபெற்ற இயக்குனர் Sam Raimi யின் படைப்பு ஆகும். இவர் அபோகலிப்டிக் அல்லது மன உளவியல் திரைப்படத்தில் மீண்டும் திரும்புவதால் ரசிகர்களிடம் ஒரு பெரிய வரவேற்பாக உள்ளது. தனித்தீவில் மாட்டிக்கொள்ளும் இருவேறு மனப்பான்மை கொண்டவர்கள் இடையே நடக்கும் உளவியல் சார்ந்த கதை நிச்சயமாக ரசிகர்களின் விருந்தாகும். Rachel McAdams மற்றும் Dylan O’Brien ஆகியோரின் நடிப்புக் கூட்டணி புனிதமான உளவியல் மற்றும் சஸ்பென்ஸ் அனுபவத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காமெடி, மானசீக உணர்வு, கடும் survival போராட்டம் என்பவை இந்தப் படத்தை சாதாரண horror-இல்லாமல் வித்தியாசமானதாக மாற்றுகின்றன.
கொசுறுத்தகவல்- மிக எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள் (Movies) – 2026 வரிசையில் Avengers: Doomsday – மலைக்க வைக்கும் சூப்பர் ஹீரோக்கள் மோதல் காட்சிகளுடன் MCU இன் பெரிய படைப்பு 2026 டிசம்பரில் வெளிவருகிறது.