‘பீஸ்ட்’ படத்துக்கு தமிழகத்திலும் தடை?!

 ‘பீஸ்ட்’ படத்துக்கு தமிழகத்திலும் தடை?!

நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் உலகெங்கும் வருகிற 13-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், குவைத் அரசு அப்படத்துக்கு அந்நாட்டில் தடை விதித்துள்ளது. அதேபோல், பீஸ்ட் படத்துக்கு தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும் என, தமிழ்நாடு முஸ்லிம் லீக் அமைப்பு மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா, தமிழக உள்துறை செயலர் பிரபாகருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டதாவது:

தமிழ் சினிமாவில் மற்ற ஜாதியினரை தவறாக சித்தரித்தால், அதற்கு சமுதாய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றன. ஆனால் முஸ்லிம்கள் மட்டும் வெடிகுண்டு, துப்பாக்கி கலாசாரத்தில் ஈடுபட்டு, நாட்டின் அமைதிக்கு எதிராக செயல்படுவது போல, திரைப்படங்களில் காட்டப்படுகின்றன.

கடந்த  2015-ம் ஆண்டு வெள்ளத்தின்போதும், கொரோனா பேரிடரின்போதும், முஸ்லிம் அமைப்புகள் செய்த நற்பணிகளை யாரும் மறந்துவிட முடியாது. தற்போது ரம்ஜான் நோன்பு கடைபிடித்து வரும் சூழலில், முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்கும்  'பீஸ்ட்' திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

-இவ்வாறு முஸ்தபா தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com