ஸ்னூக்கர் போட்டி: நடிகர் ரஹ்மானுக்குப் பரிசு!

ஸ்னூக்கர் போட்டி: நடிகர் ரஹ்மானுக்குப் பரிசு!
Updated on

-லதானந்த்

மெட்ராஸ் ரேஸ் கிளப் வருடம்தோறும் நடத்தி வரும் ஸ்னூக்கர் விளையாட்டுப் போட்டியில் நடிகர் ரஹ்மான் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளார். 

இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து  கொள்ளப் பல விதிமுறைகள் உள்ளன. உடை அணிவதில்கூட சட்டதிட்டங்கள் உண்டு.  இந்தப் போட்டியில் கலந்துகொண்டு, ஒற்றையர் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்துப் பரிசுக் கோப்பையும் இரட்டையர் பிரிவில் முதல் பரிசுக் கோப்பையும் வென்றுள்ளார். ஆனால் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி பெறவில்லை. 

இதைப் பற்றி நடிகர் ரஹ்மான் கூறுகையில் "இந்த விளையாட்டுப் போட்டியில் பங்குபெற வேண்டுமென்றால் முதலில் மனதளவில் நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

கவனம் சிதறக்கூடாது. ஆனால் படங்களின் டப்பிங் வேலைகள் மற்ற வேலைப் பளுக்களின் காரணமாக எனக்கு என்னை முழுமையாகத் தயார்ப்படுத்திக்கொள்ள இயலவில்லை; கவனமாக விளையாடவும் இயலவில்லை. அடுத்த முறை நிச்சயமாக மீண்டும் போட்டிகளில் கலந்துகொண்டு  முதலிடத்தைப் பெற முயற்சிப்பேன்'' என்று தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com