ஜென்டில்மேன் – 2

ஜென்டில்மேன் – 2

-லதானந்த்

மெகா தயாரிப்பாளரான கே. டி. குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்ட படம் 'ஜென்டில்மேன்2 ' ஆகும். 

இந்த படத்தின் இசையமைப்பாளர் மரகதமணியும் ( எம்.எம்.கீரவாணி ). இரண்டு கதாநாயகிகளாக நயன்தாரா சக்கரவர்த்தி, ப்ரியா லால் நடிக்கின்றனர். மக்களை வியப்பில் ஆழ்த்திய பிரமாண்டப் படைப்பான ஜென்டில்மேன் படத்தின் மூலம்  டைரக்டர் ஷங்கர், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரையும் உலகம் புகழச் செய்தார் கே.டி.குஞ்சுமோன். இப்போது, 'ஜென்டில்மேன்2 ' இயக்குநராக  ஏ.கோகுல் கிருஷ்ணாவையும் ஒளிப்பதிவாளராக அஜயன் வின்சென்டையும்  அறிவித்திருக்கிறார்.

 தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி பிரம்மாண்ட படங்களுக்கும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிப் பிரபலமானவர் அஜயன் வின்சன்ட். இவர் ஒளிப்பதிவு செய்த  அன்னமய்யா, ருத்ரமாதேவி, டாம் 999 போன்ற படங்களின் ஒளிப்பதிவு நுட்பம் வெகு பாராட்டுக்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

படத்தின் பின்னணியில் உள்ள தொழில்நுட்பக்  கலைஞர்களும் அனுபவமிக்க பிரபலங்களாக இருப்பார்கள் என்றும் கூறியிருக்கிறார். 

படத்தின் கதாநாயகன், மற்ற நடிகர் நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்புகளையும் விரைவில் எதிர்பார்க்கலாம் என்று மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com