‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘அடடே சுந்தரா’: டீசர் வெளியீடு!

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘அடடே சுந்தரா’: டீசர் வெளியீடு!
Updated on

'நேச்சுரல் ஸ்டார்' நானி, முன்னணி இயக்குநர் விவேக் ஆத்ரேயா, பிரபல பட தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய மூவர் கூட்டணியில் உருவான 'அன்டே சுந்தரனக்கி' என்ற தெலுங்குப் படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இது தமிழில் 'அடடே சுந்தரா' என்ற பெயரில் வெளியிடப் பட்டிருக்கிறது.

தெலுங்கில் 'அன்டே சுந்தரனக்கி' படத்தின் மூலம் நடிகை நஸ்ரியா நசீம் தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் விளம்பரங்களால் ரசிகர்கள் ஈர்க்கப்பட்ட நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

படத்தின் கதை: நிறைய குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட பிராமண குடும்பத்தில் ஒரேயொரு ஆண் வாரிசாக சுந்தர் என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நானி நடித்திருக்கிறார். ஒரே ஆண் வாரிசு என்பதால் குடும்ப உறுப்பினர்கள் தன் மீது காட்டும் அதீத அரவணைப்பை தவிர்ப்பதற்காக ஜோதிடர்கள் கூறும் ஒவ்வொரு ஆலோசனையும் பின்பற்றவேண்டிய அழுத்தத்திற்கு சுந்தர் ஆளாகிறார். இதனால் அவருக்கு பல நெருக்கடிகள் ஏற்படுகிறது.

இந்த தருணத்தில் சுந்தர், லீலா தாமஸ் என்ற தன்னுடைய ஆத்ம தோழியை காண்கிறார். அவரது பெயரே அவர் ஒரு கிறிஸ்தவர் என்பதை குறிக்கிறது. இந்த இரண்டு குடும்பங்களும் வெவ்வேறு சாதி, மதம் சார்ந்து இருக்கிறார்கள். ஆனால் படத்தின் முக்கிய முரண்பாடாக இந்த அம்சம் மையப்படுத்தப் படவில்லை.

'நேச்சுரல் ஸ்டார்' நானியின் பிரத்தியேக வசன உச்சரிப்பு, இப்படத்தின் உயிர்நாடியாக அமைந்துள்ளது. அதே தருணத்தில் நடிகை நஸ்ரியா நசீம் உடனான அவரது கெமிஸ்ட்ரி, ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. நானி மற்றும் நரேஷ் ஆகிய இருவரும் இணைந்து நகைச்சுவை பகுதியை சிறப்பித்திருக்கிறார்கள். ரவிதேஜா கிரிஜாலா இப்படத்தை தொகுத்திருக்கிறார். . ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி, இசையமைப்பாளர் விவேக்.

இந்தப்படம் தமிழில் 'அடடே சுந்தரா' என்ற பெயரிலும், மலையாளத்தில் 'ஆஹா சுந்தரா' என்ற பெயரிலும் ஜூன் 10-ம் தேதியன்று ஒரே சமயத்தில் வெளியாகிறது.

logo
Kalki Online
kalkionline.com