

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து மற்றொரு கலையுலக வாரிசு உருவாகியுள்ளார். நடிப்புப் பல்கலைக்கழகமான சிவாஜியின் அன்னை இல்லத்திலிருந்து அவரது மகன் பிரபு, பேரன்கள் விக்ரம் பிரபு, துஷ்யந்த் போன்றவர்கள் நடித்து கொண்டிருக்கிறார்கள்.
இப்போது சிவாஜியின் மகன் ராம்குமாரின் இரண்டாவது மகனான தர்ஷன் கணேசன் சினிமாவில் நடிக்க வருகிறார். இவர் புனே திரைப்படக் கல்லூரியில் முறையான நடிப்பு பயிற்சி பெற்றவர்.
இந்தி உட்பட பல்வேறு மொழிகள் அறிந்தவர். மேலும் தன் தாத்தாவை போலவே பல்வேறு தெருகூத்து நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ளார்.
தற்போது தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார் தர்சன். அவர் நடிக்கும் படத்தை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here