நடிகையின் கலெக்டர் ஆகும் கனவு!

நடிகையின் கலெக்டர் ஆகும் கனவு!
Updated on

-ராகவ் குமார் 

டிகைகளில் மனிஷா பிரியதர்ஷினி வித்தியாசமானவர். களவாணி படத்தில் விமலுக்கு தங்கையாக சுட்டி பெண்ணாக அறிமுகம் ஆனவர் இப்போது சில படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.    

மனிஷாவின் தாய்க்கு தன் மகள் நடிப்போடு சேர்த்து நன்றாக படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அந்த வகையில் மனிஷா இப்போது சட்டப்படிப்பான LLB இறுதி ஆண்டு படித்து கொண்டிருக்கிறார் மேலும் அவருக்கு கலெக்டர் ஆக வேண்டும் என்ற கனவு இருக்கிறது.

அக்கனவை நிறைவேற்ற முயற்சித்து படித்து கொண்டிருக்கிறார். UPSC உட்பட பல்வேறு போட்டி தேர்வுகள் எழுதுவதற்கு  புத்தகங்கள் வாங்க நடிகர் ஜெய்யிடம் உதவி கேட்டு இருக்கிறார். நடிகர் ஜெய்யும் மனிஷாவை  நேரில் சந்தித்து கலெக்டர் ஆக வாழ்த்து தெரிவித்து, புத்தகங்கள் வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளார்.    

நடிகை கண்ட கனவை நினைவாக்க உதவும் ஜெய்யின் முயற்சியை பாராட்டலாம். எவ்வளவுதான் நடித்து புகழ் பெற்றாலும், கல்விக்கு ஈடு இணைஇல்லை என்பதை உணர்ந்த மனிஷாவின் கனவு நினைவாக வாழ்த்துவோம். –ராகவ் குமார் 

logo
Kalki Online
kalkionline.com