

கமல்ஹாசன் நடிப்பில் உருவான 'விக்ரம்' திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது அதில் கமல்ஹாசன் பேசியதாவது:
கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி விக்ரம் படம் ரிலீஸாக உள்ளது இது திட்டமிட்ட ஒன்றல்ல.. ஆனால் சினிமா தொடர்பாக கலைஞரைப் பற்றிச் சொல்ல ஆயிரம் பக்கங்கள் பத்தாது அவர் பிறந்தநாளன்று என் படம் வருவது எதேச்சையான ஒன்று. சினிமா என்பது ஒரு தனி மொழி. உலகளாவிய அந்த சினிமா மொழியில் என் தனித் திறமையை வளர்த்துக் கொள்வதற்கு கலைஞரும் ஒரு முக்கிய காரணம்.
இந்தியன்2 வெளியாகும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். விக்ரம் படத்தின் அடுத்த பாகமும் வெளியாகும். அதற்கும் லோகேஷ் கனகராஜ்தான் இயக்குனராக பணியாற்றுவார் அது நான் எடுத்த முடிவு. அதேபோல் இந்தியன்-2 படம் வெளியாவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
-இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்..
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here