இசைஞானி இசையமைப்பில் ஆங்கிலத் திரைப்படம்!

இசைஞானி இசையமைப்பில் ஆங்கிலத் திரைப்படம்!

Published on

 – ஜிக்கன்னு.

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள ' பியூட்டிஃபுல் பிரேக் அப்' திரைப்படத்தின் 'கம் ஃப்ரீ மீ'பாடல் உலக இசை தினமான ஜூன் 21-ம் தேதி வெளியிடப்பட்டது.

' பியூட்டிஃபுல் பிரேக்அப்' படம் ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் ஆங்கிலத் திரைப்படமாகும். அஜித்வாசன் உக்கினா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் க்ரிஷ் முத்ரகடா மற்றும் மேட்டில்டா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும் பல முக்கியமான திரைக்கலைஞர்களும், தொழிற்நுட்ப வல்லுநர்களும் இப்படத்தின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றி இருக்கிறார்கள்.

இசைஞானி இளையராஜா வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு திகில் படத்திற்கு இசையமைப்பது இந்த படத்துக்குத்தான்! இப்படத்திற்காக BOW TIE Symphony Orchestra –ல் மாயாஜாலமான அசல் ஒலிப்பதிவுகளை இளையராஜா உருவாக்கியுள்ளார்.

சமீபத்தில் கூட இளையராஜா அளித்திருந்த ஒரு நேர்காணலில் கூட, " பியூட்டிஃபுல் பிரேக் அப் திரைப்படத்தையும், அதன் இயக்குநரையும் வெகுவாக பாராட்டி பேசியிருந்தார்

இதுகுறித்து இந்த ஆங்கில திரைப்படத் தயாரிப்பு சார்பில் தெரிவித்ததாவது;

இந்த படத்துக்கு இசைஞானியின் இசை முற்றிலும் தனித்துவமானதாக வேறுவகையில் அற்புதமாக இருப்பதால், மேற்கத்திய பார்வையாளர்கள் கொண்டாடுகிறார்கள். அதனால்தான் இந்தப் படத்தின் இசை ஆஸ்கார் கிராமி, கோல்டன் குளோப் விருதுகளுக்கான போட்டிக்கு அனுப்பப் பட்டுள்ளது.

மேலும் நன் நாட்டில் 12-வது தாதாசாஹேப் பால்கே திரைப்பட விழாவில், இந்த படம் சிறந்த பின்னணி இசைக்கான விருதை வென்றது. மேலும்  சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) பிரிவில் ஸ்ரீகாந்த் கண்டாலாவுக்கு சிறந்த படத்திற்கான விருதையும் இந்த படம் பெற்றுத் தந்தது. மேலும் சில சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்குபெற்று, சிறந்த படமாக தேர்வாகியுள்ளதது.

-இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

logo
Kalki Online
kalkionline.com