அழகு -துணிவு –அதுல்யா!

அழகு -துணிவு –அதுல்யா!

-ராகவ் குமார்.

பி மாநில பெண்கள்  கதாநாயகியாக கோலோச்சும் தமிழ் சினிமாவில் சமீப காலத்தில் தமிழ் பெண்களும் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார்கள்.

அப்படி அக்மார்க் தமிழ் பெண்ணான அதுல்யா  ரவிக்கு இளைஞர்கள் மட்டுமல்லாமல் இளம் பெண்களும்  ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு. காரணம் அம்மணியின் நடிப்பும் முகமும் தங்கள் வீட்டு பெண்ணை போன்று இருப்பதுதான்! 

அதுல்யா ஏற்கனவே ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் தன் திறமையை காட்டும் ஒரு படத்திற்காக காத்து  கொண்டிருக்கிறார். வெற்றி செல்வன் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் 'எண்ணித் துணிக' படம் திரைப்படம் தனக்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என்று உறுதியுடன் இருக்கிறார்.ஜெய் உடன் இப்படத்தில் ஜோடி சேர்ந்து இருக்கிறார். இதுவரை பார்க்காத கேரக்டர்களில் ஜெய்யும், அதுல்யாவும் நடித்து இருக்கிறார்களாம்.  

"வாழ்கையில் வெற்றி பெற துணிவும்,தன்னம்பிக்கையும் தேவை. சினிமாவில் வெற்றி பெற இன்னமும் அதிகம் இது வேண்டும். துணிந்தால் வாழ்க்கை மாறும் எண்ணித்  துணிக படம் சொல்கிறது.திருக்குறளின் முதல் வரியை டைட்டிலாக வைத்தது என்னை ஈர்த்தது" என்கிறார் அதுல்யா.

நம்ம கோயம்புத்தூர் பெண்ணின் துணிவும் நம்பிக்கையும் வெற்றி பெற எண்ணித் துணிக டீமின் வெற்றிக்கு வாழ்த்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com