"ராங்கி" படத்தில் திரிஷா!

Raangi
Raangi
ராகவ்குமார்

ராகவ் குமார். கல்லூரி படிக்கும் காலம் தொட்டு சிறு சிறு கட்டுரைகள் தினசரிகளில் எழுதிய அனுபவம். இதழியல் மற்றும் தகவல் தொடர்பு துறையில் முதுகலை மற்றும் எம் பில் படிப்பு . 15 ஆண்டுகளுக்கு மேலாக உதவி பேராசிரியராக பணி. சென்னை அகில இந்திய வானொலியில் சில காலம் தொகுப்பாளராக பணி. 2006 முதல் கல்கியில் சினிமா விமர்சனங்கள், சினிமா பிரபலங்களின் நேர்காணல் எழுதிய ராகவ், கல்கி ஆன்லைன் தொடங்கிய சமயத்திலிருந்து உடன் பயணித்து வருகிறார். புதிய சினிமா, புதிய சினிமா கலைஞர்களின் படைப்புகளை ஊக்கப்படுத்தி அவர்களின் நேர்காணல்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம்.

Updated on: 

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளவர் திரிஷா. சமீபத்தில் இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரிய வெற்றி அடைந்துள்ளது. தற்சமயம் திரிஷா ராங்கி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த வாரம் வெளியாகயுள்ள ராங்கி படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய திரிஷா "இந்த படத்தின் படப்பிடிப் பிற்காக இரண்டு முறை எங்கள் குழு உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு சென்று வந்தோம். பொதுவாக இரண்டு முறை படப்பிடிப்பு க்கு சென்று வருவது அரிது. தயாரிப்பாளரின் பெருந்தன்மையால் இது நடந்தது.

அந்த நாட்டினர் மொழி எங்களுக்கு புரியவில்லை எங்கள் மொழி அவர்களுக்கு புரியவில்லை. இருப்பினும் வெற்றிகரமாக நடிக்க வைத்தார் இயக்குனர்.

Trisha
Trisha

சில காட்சிகள் ராணுவம் தொடர்பானதாக இருந்ததால், இக்காட்சிகளை அமைக்க தேவைப்படும் பொருட்களை மிக இயற்கையாக வைத்திருந்தார் டைரக்டர்.

ஒரு நடிகையாக ஒரு படத்தை நடித்து தந்து விட்டேன். படத்தின் இசை, பாடல்கள் எடிட்டிங், அனைத்தும் சேர்ந்துதான் வெற்றிக்கு உறுதுணையாக அமைகின்றது. ராங்கி படத்தில் நான் சூப்பர் உமன் என்று சொல்ல முடியாது. ஆனால் நாம் யதார்த்த வாழ்வில் பார்க்கும் பல பெண்களின் முகமாக நடித்திருக்கிறேன்" என்றார்.

இப்படத்தின் இயக்குனர் சரவணன், "முதலில் த்ரிஷாவை நடிக்க அணுகும் போது கொஞ்சம் தயக்கம் இருந்தது. பின்பு பேச ஆரம்பித்த உடன் திரிஷாவை தவிர இந்த கேரக்டர்க்கு வேறு யாரும் சரியாக இருக்க மாட்டார்கள் என்பது புரிந்தது. என்கிறார்.. இப்படம் சம கால பிரச்சனைகளை பற்றி பேசும் படமாக இருக்கும் என்கிறது சினிமா வட்டாரம். இப்படத்தை சுபாஷ்கரண் தயாரித்துள்ளார்.