உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் ‘கண்ணை நம்பாதே’ : முதல் போஸ்டர் வெளியீடு!

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

நேற்று உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு அருள் நிதி நடிப்பில் வெளியான படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள். இந்த படத்தின் இயக்குநர் மு.மாறன் அடுத்ததாக இயக்கும் படம் ‘கண்ணை நம்பாதே’. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு சாம். சி. எஸ் இசையமைக்கிறார்.

கண்ணை நம்பாதே
கண்ணை நம்பாதே

அண்மையில் உதயநிதி ஸ்டாலினின் ‘கலகத் தலைவன்’ படம் வெளியானது. இந்தப் படம் க்ரைம் த்ரில்லர் வகை படமாக வெளியான நிலையில், தற்போது மீண்டும் க்ரைம் படம் ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார்.

முன்னதாக உதயநிதி ஸ்டாலின் டைரக்டர் மாரி செல்வராஜ் இயக்கும் ‘மாமன்னன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நேற்று உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை யொட்டி ‘கண்ணை நம்பாதே’ படத்தின் முதல் போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது. இதில், ‘ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னாலும் ஒரு எமோஷனல் கதை இருக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.எ வான உதயநிதி் ஸ்டாலின் அரசியல் வட்டாரத்திலும், சினிமாத்துறையில் தொடர்ந்து கலக்கி வருகிறார். உதயநிதியின் ரசிகர்கள் இத்திரைப்படத்தினை காண ஆர்வமாக காத்து கிடக்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com