GOAT and Vijayakanth
GOAT and Vijayakanth

The GOAT படத்தில் கம்பேக் கொடுக்கும் விஜயகாந்த்… சூப்பர் நியூஸ்!

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் GOAT படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் கம்பேக் கொடுக்கவுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார். இதனால், மீண்டும் அண்ணன் தம்பி இணையும் செய்தி இணையத்தை கலக்க ஆரம்பித்துவிட்டது.

கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து The GOAT படத்தின் படப்பிடிப்பு தொடங்கி, தற்போது மிகவும் விரைவாக நடந்து வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஸ்னேகா, லைலா, ஜெயராம் என முன்னணி நடிகர்கள் நடிக்கும் இப்படத்தின் ‘விசில் போடு’ பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து, பிரேமலதா விஜயகாந்த் ஒரு பேட்டியில் பேசியதாவது, “GOAT படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு எங்கள் வீட்டுக்கு வந்து ஒரு ஐந்தாறு முறை பேசியிருக்கிறார். அதற்கு முன்னர் சண்முக பாண்டியனிடமும் பேசியிருந்தார். பிரச்சாரத்தின் நடுவே நான் சென்னை சென்றிருந்தபோது, ”தி கோட் படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்தை ஒரு காட்சியில் நாங்கள் கொண்டு வர எண்ணுகிறோம். நீங்கள் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.” என்று கூறினார்.

விஜய்யும் என்னை தேர்தலுக்கு பிறகு சந்திப்பதாக கூறினார். இன்று விஜயகாந்த் இல்லாத நேரத்தில், அவர் இடத்திலிருந்து நான்தான் யோசிக்க வேண்டும். அவர் இருந்திருந்தால் கண்டிப்பாக நோ சொல்லியிருக்க மாட்டார். ஏனெனில், விஜய் மீதும், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மீதும் அவருக்கு பெரிய மரியாதை உள்ளது. விஜய்யை ‘செந்தூர பாண்டியன்’ படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது விஜயகாந்த் தான். அதேபோல் எஸ்.ஏ.சந்திரசேகரின் 17 படங்களில் விஜயகாந்த் நடித்திருக்கிறார். ஆகையால், அவர் மேல் விஜயகாந்திற்கு தனி பாசம் உள்ளது.

இதையும் படியுங்கள்:
பிறந்தநாள் ஸ்பெஷலாக நாளை வெளியாகும் விக்ரம் படத்தின் அப்டேட்!
GOAT and Vijayakanth

AI தொழில்நுட்பம் மூலம் மீண்டும் விஜயகாந்தை திரையில் கொண்டு வருவது குறித்து, விஜயகாந்த் இடத்திலிருந்துதான் நான் முடிவெடுக்க வேண்டும். அதுவுமில்லாமல், இளையராஜா குடும்பத்துடன் நான் நெருங்கி பழகியிருக்கிறேன். வெங்கட் பிரபுவை சிறு வயதிலிருந்தே பார்த்து வருகிறேன். ஆகையால் இருவருக்குமே நோ சொல்ல முடியாததால், விஜய் என்னை சந்திக்கும்போது நோ சொல்லமாட்டேன்.” என்று பேசினார்.

ஆகையால், The Goat படத்தில் விஜயகாந்த் கம்பேக் கொடுப்பது உறுதியாகிவிட்டது. மீண்டும் அவரை திரையில் காணவே மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால், The GOAT படம் வெற்றிப்படம் என்பதை இப்போதே கணிக்கலாம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com