அடுத்தப் படத்திற்கான அப்டேட்... தெலுங்கு நடிகருடன் இணையும் அட்லீ!

Atlee
Atlee

இயக்குனர் அட்லீ ஜவானின் பெரிய ஹிட்டிற்குப் பிறகு சில காலம் ஓய்வில் இருந்தார். தற்போது அவரின் அடுத்தப் படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது. அட்லீ தன்னுடைய அடுத்தப் படத்தில் தெலுங்கு முன்னணி நடிகருடன் இணையவுள்ளார். வழக்கம்போல் அனிருத் அட்லியின் இந்தப் படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.

சங்கரின் துணை இயக்குனராக சினிமாவில் அறிமுகமான அட்லீ, ராஜா ராணிப் படத்தை முதன்முறையாக இயக்கினார். பின்னர் விஜயின் தெறி, மெர்சல் மற்றும் பிகில் எனத் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களை இயக்கினார். இவரின் திறமையால் பாலிவுட்டில் அதுவும் பெரிய நடிகருடன் கைக்கோர்த்தார். ஷாருக்கான் வைத்து அட்லீ இயக்கிய ஜவான் படம் மசாலா கதை என்று ரசிகர்கள் கூறினாலும், 1000 கோடி வசூலை ஈட்டிச் சாதனைப் படைத்தது. இதனையடுத்து இவர் பாலிவுட் சினிமாவிற்கும் செல்லப் பிள்ளையாக மாறினார். சமீபத்தில் கூட அம்பானி வீட்டுக் கல்யாணத்திற்கு இவருக்கு அழைப்புவிடுக்கப்பட்டது.

இதனால் இவர் 100 கோடிச் சம்பளம் கேட்பார் என ரசிகர்கள் ஒருப்பக்கம் பேசத்தொடங்கினர். கோலிவுட்டில் அவ்வளவு சம்பளம் கொடுப்பார்களா? இதனால் இவர் கோலிவுட்டில் படம் எடுப்பாரா? போன்றப் பல கேள்விகள் எழுந்தவண்ணம் இருந்தன. இதனையடுத்துத் தற்போது வெளியானத் தகவல் இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

அட்லீ தனது அடுத்தப் படத்தைப் பற்றி துணை இயக்குனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய வீடியோ இணையத்தில் வெளியானது. இந்தநிலையில் அட்லீ தனது அடுத்த படத்தில் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுனுடன் கைக்கோர்க்கவுள்ளார் என்றச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தப் படத்திற்கும் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அட்லீ இந்தப் படத்திற்கு 60 கோடிச் சம்பளம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அல்லு அர்ஜுன், அட்லீ, அனிருத் மூவரும் இணைந்ததால் இதனை ரசிகர்கள் AAA என்றழைக்கின்றனர். மேலும் இதனைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் 8ம் தேதி வெளியாகும் என்பது உறுதியானது.

இதையும் படியுங்கள்:
சினிமா விமர்சனம்: GAAMI - ஆன்மிகம் – உளவியல் – அறிவியல் கலந்த டேஸ்டி அவியல்!
Atlee

அட்லீ ஜவான் படத்திற்கு அடுத்து விஜய் மற்றும் ஷாருக்கான் வைத்துப் பெரிய பான் இந்தியா படமாக எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் விஜய் அரசியலில் இறங்கிய காரணத்தினாலும் அவர் இன்னும் ஒரு படம் மட்டுமே நடிப்பேன் என்று கூறிவிட்டதாலும் அட்லீ அந்த ஐடியாவை கைவிட்டுவிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com