வெடிக்கும் பிரச்சனை... கவிதையால் மறைமுகமாக இளையராஜாவை தாக்கிய வைரமுத்து!

Ilayaraja - Vairamuthu
Ilayaraja - Vairamuthu

இளையராஜா - வைரமுத்து பிரச்சனை வெடித்து வரும் நிலையில், தற்போது கோள் மூட்டுபவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பதிலை வைத்து பதிலடி கொடுத்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

இசைஞானி இளையராஜா இசையில், கடந்த 1980-வது ஆண்டு வெளியான 'நிழல்கள்' படத்தின் மூலம் பாடலாசிரியராக திரையுலகில் நுழைந்தவர் வைரமுத்து. இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது. குறிப்பிற்காக இப்படத்தில் இடம்பெற்ற 'இது ஒரு பொன் மாலை பொழுது' என்கின்ற பாடலின் வரிகள் மூலம் வைரமுத்துவும் வாய்ப்பு கொடுக்க துவங்கினார். 3 வருடத்தில் முன்னணி பாடலாசிரியராக உயர்ந்த வைரமுத்து இதுவரை ஏகப்பட்ட தமிழ் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்நிலையில், அண்மையில் 'படிக்காத பக்கங்கள்' என்கின்ற ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற வைரமுத்து, "இசை பெரிதா.. மொழி பெரிதா என்பது இப்பொழுது பெரிய விவாதமாக மாறி உள்ளது. இதில் என்ன சந்தேகம், இசை எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரியது மொழி. மொழி எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியது இசை. இதை புரிந்து கொண்டவர்கள் ஞானி, புரிந்துகொள்ளாதவர்கள் அந்நியானி என்று பேசி இருந்தார்".

இளையராஜாவை சாடி பேசிய வைரமுத்துவுக்கு எதிராக, ரசிகர்கள் சிலர் தங்களின் கண்டனத்தை தெரிவிக்க, இளையராஜாவின் சகோதரர் கங்கையமரனும் அறிக்கை வெளியிட்டு தன்னுடைய எதிர்ப்பைதெரிவித்தார்.

இந்த விஷயம் தற்போது விவாத பொருளாக மாறியுள்ள நிலையில், சமூக வலைத்தளத்தில் கலைஞர் கருணாநிதி அவர்கள் கூறிய தன்னை பற்றி கூறிய வார்த்தையை பதிவிட்டு, மறைமுகமாக இளையராஜாவை சாடி உள்ளதாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்:
பாகுபலி 3 படம் உருவாகிறதா? ராஜமௌலியின் சூப்பர் அப்டேட்!
Ilayaraja - Vairamuthu

அதில், "கலைஞருக்கும்,

அ.இ.அ.தி.முகவிலிருந்து

தி.மு.கவில் வந்துசேர்ந்த

ஒரு முக்கியப் புள்ளிக்கும்

நடந்த உரையாடல்

எனக்கு

வாய்மொழியாக வந்தது;

தயக்கத்தோடு

கலைஞரையே கேட்டு

உறுதி செய்தது

சொற்கள் மாறியிருக்கலாம்;

சொன்னபொருள் இதுதான்

‘வைரமுத்த

ரொம்ப நம்பாதீங்க தலைவரே!’

‘ஏன்? எதனால?’

‘அவரு உங்களப்

புகழ்ந்து பேசுறாரே தவிர

ஜெயலலிதாவ எப்பவும்

திட்ட மாட்டேங்குறாரு’

(கலைஞர்

சிறு சிந்தனைக்குப் பிறகு)

‘நீ அங்க இருந்து

இங்க வந்திருக்க

அங்க இருந்தபோது

என்னத் திட்டுன;

இங்க இருந்து

அந்த அம்மாவத் திட்டுற

வைரமுத்து

எப்பவும் இடம் மாறல

ஜெயலலிதா வைரமுத்துக்கு

எதிரியும் இல்ல

அவரு தமிழுக்காக

நம்மகூட நிக்கிறாரு

இன்னொண்ணு

அவரு யாரையும் திட்டமாட்டாரு;

அது அவரு இயல்பு’

கோள் சொன்னவர்

குறுகிப்போனார்

இப்படித்தான்

கேடுகள்

ஈட்டி எறியும்போதெல்லாம்

கேடயமாவது சத்தியம். என பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com