வந்தாச்சு ஜெய்பீம் புத்தகம்!

வந்தாச்சு ஜெய்பீம்  புத்தகம்!

ஜெய்பீம் திரைப்படம் தமிழ் சினிமா தாண்டி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த படம்.

கடந்த 1993 ம் ஆண்டு தமிழ் நாட்டில் வட மாவட்டங்களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் காவல் துறையின் கொடூரமான முகத்தை தோலுரித்து காட்டியது.

நீதியரசர் சந்துரு ஒரு வக்கீலாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்று தந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியே சில ஆண்டுகளுக்கு முன்புதான் கிடைத்தது. சூர்யா படத்தை தயாரித்து, சந்துருவாக நடித்திருப்பார். ஜெய் பீம் படத்தை ஞான வேல் இயக்கியிருந்தார். தற்போது ஜெய்பீம் திரைக் கதை வசனத்துடன் புத்தகமாக வந்துள்ளது. அருஞ்சொல் பதிப்பகம் இதை புத்தகமாக வெளியிட்டுள்ளது.

இந்த புத்தக வெளியிட்டு விழாவில் நீதியரசர் சந்துரு, இயக்குனர் ஞான வேல் கலந்து கொண்டார்கள். இந்த புத்தகத்தில் சந்துரு, சூர்யா, ஞான வேல் பேட்டி களும் இடம் பெற்றுள்ளன. சிறந்த படங்கள் தர முயற்சிப்பவர்களுக்கு ஜெய் பீம் புத்தகம் ஒரு பாடமாக இருக்கும்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com