Actress Varalakshmi Sarathkumar
Actress Varalakshmi Sarathkumar

2வது மனைவியாகும் வரலட்சுமி சரத்குமார்... மணமகன் யார் தெரியுமா?

Published on

முன்னணி நடிகராக வலம் வரும் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் தனது அடுத்தகட்ட வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கவுள்ளார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான 'போடா போடி' படத்தில் நடித்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், வரலட்சுமிக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், மற்ற மொழி படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் தான், அதிரடியாக இயக்குனர் பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' பட வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து வில்லி அவதாரம் எடுத்த அவர் பல படங்களில் நடித்து அசத்தினார். தற்போது தமிழில் ராயன் படம் உட்பட தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இவரும் விஷாலும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதல் தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து வரலட்சுமி நடிகர் சிம்புவை திருமணம் செய்யவுள்ளார் என்று பேசப்பட்டு வந்த நிலையில், திடீரென திருமண அறிவிப்பை வெளியிட்டு அனைவரின் வாயை அடைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
GOAT திரைப்பட இயக்குநர் தந்த சூப்பர் அப்டேட்!
Actress Varalakshmi Sarathkumar
actress varalakshmi sarathkumar marriage
actress varalakshmi sarathkumar marriage

14 வருடங்கள் பழகிய நண்பரும், தொழிலதிபரான நிக்கோலய் சச்தேவ் என்பவரை தான் கரம்பிடிக்கவுள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன், திருமண நிச்சயதார்த்தம் விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில் நிக்கோலய் சச்தேவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, முதல் மனைவியான கவிதாவை விவாகரத்து செய்துவிட்ட நிலையில், இவருக்கு 15 வயதில் மகள் ஒருவர் உள்ள தகவல் வெளியாகியுள்ளது. இவரின் முதல் மனைவி மற்றும் மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com