சூர்யா பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்... ரீ-ரிலிசாகும் சூப்பர் படம்!
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் மாஸ் படம் ஒன்றை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். தற்போது இவர், சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் நிறைய கிராபிக்ஸ் பணிகள் நடைபெறுவதாலும், இந்த படத்தின் போது ஏற்பட்ட விபத்தாலும் பல படங்கள் கைவிடப்பட்டன.
ஏற்கனவே இயக்குனர் பாலாவின் வணங்கான் படம் கைவிடப்பட்டதில், அந்த படத்தில் நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடித்து அசத்தியுள்ளார். தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் அவர் நடிப்பாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதை தவிர, சுதன் கோங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாகவே ரீ-ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. புது படங்களின் வரவை விட பழைய படங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. கொரோனா காலகட்டத்தில் நீண்ட லாக்டவ்னுக்கு பிறகு திரையரங்கிற்கு வரும் மக்களின் கூட்டம் குறைவாக இருந்த காரணத்தினால் பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்தனர். இதனால் மக்கள் கூட்டம் மீண்டும் திரையரங்குகளை நோக்கி வர தொடங்கியது. தற்போது அதே போல் மீண்டும் பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான கில்லி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. கில்லி படம் வெளியான முதல் நாள் FDFS காட்சி, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின் வெளியான பிறகும் ரசிகர்கள் FDFS போல கில்லி படத்தை கொண்டாடினார்கள். இப்படி பல படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ஹிட்டாகி வருகின்றன.
தொடர்ந்து மே 1ஆம் தேதி அஜித் பிறந்தநாளையொட்டி தீனா வெளியாகி வெற்றி பெற்றது. மேலும், விஜய் பிறந்தநாளுக்கு வில்லு திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நடிகர் சூர்யா பிறந்தநாளையொட்டி, ஜூலை 23 ஆம் தேதி ஹரி இயக்கத்தில் வெளியான வேல் திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சூர்யா, அசின், மனோரம்மா, வடிவேலு மற்றும் பலர் நடித்திருர்ப்பார்கள். மேலும், சூர்யாவின் வேல் படம் வெளியாகி தற்போது 17 ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.