தேர்தலில் வெற்றி... வாழ்த்து கூறிய விஜய்... யாருக்கு தெரியுமா?

Actor vijay
Actor vijay

மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், வெற்றி பெற்ற நபருக்கு அரசியலில் குதித்த நடிகர் விஜய் முதல் ஆளாக வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியானது. தமிழகத்தில் திமுக கூட்டணி 40க்கு 40 தொகுதி வெற்றி பெற்று மீண்டும் ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளது. பாஜக கூட்டணி 294 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 231 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. இதன்மூலம் மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது பாஜக.

இந்த நாடாளுமன்ற தேர்தலோடு ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலும் நடத்தப்பட்டது. அதில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து உள்ளது. அதை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் மற்றும் ஜன சேனா கூட்டணி அமோக வெற்றியை பெற்று ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. ஆட்சியை கைப்பற்றி இருக்கும் தெலுங்கு தேசம் கூட்டணிக்கு மோடி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
தேர்தலில் படுதோல்வி... மனமுடைந்த நடிகை ராதிகா சரத்குமார்!
Actor vijay

அந்த வகையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் எக்ஸ் தளம் வாயிலாக பவன் கல்யாண் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

நடிகராக இருந்த விஜய், தற்போது அரசியல் கட்சி தொடங்கி அடுத்த தேர்தலுக்கு தயாராகி வருகிறார். இவரது அரசியல் வருகை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த நிலையில், இவரது எக்ஸ் பதிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத்தியில் ஆட்சியமைக்க உள்ள பாஜக மற்றும் தமிழகத்தில் 40க்கு 40 இடங்களையும் கைப்பற்றி அமோக வெற்றியை பெற்றுள்ள திமுக போன்ற கட்சிகளுக்கு நடிகர் விஜய் எந்தவித வாழ்த்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com