விடாமுயற்சி Update: கால் ஷீட் கொடுக்காத திரிஷா.. கலங்கி நிற்கும் படக்குழு!

Ajith and Trisha
Ajith and Trisha

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா நடித்து வரும் படம் விடாமுயற்சி. பல மாதங்களாக எந்த அப்டேட்டும் இல்லாமல் உருவாகி வரும் இப்படத்தில் நடிக்க படக்குழுவிற்குத் திரிஷாவின் கால்ஷீட் இப்போது கிடைக்கவில்லை என்று செய்திகள் வெளியாகிவுள்ளன.

விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சமீபத்தில் அஜர்பைஜானில் முடிந்தது. இந்தப் படப்பிடிப்பில் திரிஷா, அஜித், அர்ஜூன், ஆரவ், ரெஜினோ ஆகியோர் இருந்தனர். மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித், அர்ஜூன், திரிஷா சேர்ந்து நடிப்பதால் விடாமுயற்சி படம் பல எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் உள்ளது என்றே கூற வேண்டும். இப்படத்திற்கு பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்து எந்தவிதமான அப்டேட்களும் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

ஆனால் அவ்வப்போது செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையில் இப்படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி, படத்திற்கான பட்ஜெட்டை இழுத்துவிட்டதால் வேறு இடத்தில் நடத்த திட்டமிட்ட பல காட்சிகள் அஜர்பைஜானிலேயே நடத்தி முடித்ததாக தகவல் கசிந்தது. இப்போது படக்குழு முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து ஓய்வில் உள்ளது. அதேபோல் இயக்குனர் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கான இடங்களைத் தேடி வருகிறார்.

ஒருபக்கம் கலை இயக்குனர் மிலனின் உயிரிழப்பு எனப் பல தடங்கல்கள் வந்தபோதிலும், ஷூட்டிங் விறுவிறுப்பாகவே சென்றது. இந்நிலையில் அடுத்தக்கட்ட ஷூட்டிங்கிற்கு திரிஷாவிடம் கால்ஷீட் இல்லையென்றும், அவர் ஷூட்டிங் வர மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. ஏனெனில் திரிஷா கமலஹாசனுடன் தக் லைஃப் படம் மற்றும் சிரஞ்சீவியுடன் ஒரு படம் கமிட் ஆகியிருக்கிறார். இதற்கு திரிஷாவிற்கு அடுத்தடுத்து ஷூட்டிங் உள்ளதுதான் காரணம் என்று தெரியவருகிறது. அதேசமயம் படக்குழு விரைவில் ஷூட்டிங்கை முடிக்க வேண்டும் என்று பலதரப்பிலிருந்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ரசிகர்களும் ஒரு பக்கம் விடாமுயற்சி அப்டேட் வேண்டுமென்று செல்லும் இடமெல்லாம் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

இதையும் படியுங்கள்:
"இது என் இடம்" திகிலூட்டும் ஹன்சிகாவின் கார்டியன் டீசர்... எப்படி இருக்கு?
Ajith and Trisha

இதனால் நடிகர் அஜித்தே திரிஷாவிடம் நேரடியாக ஷெட்யூலை அட்ஜஸ்ட் பண்ணி கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திரிஷாவிற்கு தொடர்ந்து பட லைனப் உள்ளதால், அவர் ஓய்வேயில்லாமல் நடித்து வருகிறார். இந்நிலையில் அஜித் கேட்டுக்கொண்டதால் திரிஷா விடாமுயற்சியில் நடிக்க நேரத்தை அட்ஜஸ்ட் செய்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளாராம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com