வீடியோ : சின்னஞ்சிறு பிள்ளையாக மாறி கமல்ஹாசன் செய்த சேட்டை!

வீடியோ : சின்னஞ்சிறு பிள்ளையாக மாறி கமல்ஹாசன் செய்த சேட்டை!
Updated on

நடிகர் கமல்ஹாசன் மற்றும் ஸ்ருதிஹாசன் இருவரும் இணைந்து 'விக்ரம்' பட தீம் மியூசிக்கிற்கு வைப் ஆன விதம் தற்போது வைரலாகி வருகிறது.

1986ம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் 'விக்ரம்' படம் வெளியானது. அந்த காலகட்டத்திலேயே பிரம்மாண்டமாக உருவான இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, 2022ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் அதே 'விக்ரம்' பெயரில் படம் வெளியாகி இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில், 1986ம் ஆண்டு வெளியான 'விக்ரம்' படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்த நிலையில், அப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் குரலில் 'விக்ரம்... விக்ரம்...' என்று ஒலிக்க ஒரு தீம் மியூசிக் இடம்பெற்றிருக்கும். அது அப்போதே படுபேமஸானது.

அதே தீம் மியூசிக்கை அனிருத் ரீமிக்ஸ் செய்து, தற்போது வெளியான 'விக்ரம்' படத்ததிலும் அதை பயன்படுத்தியிருப்பார். இதுவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். அதில், இளையராஜா இசையமைத்த 'விக்ரம்' படத்தின் தீம் மியூசிக்கை ஒலிக்கச் செய்து, அதை ரசித்துக்கொண்டிருக்க, திடீரென குழந்தைபோல் மாறிய கமல், 'விக்ரம்...' என்று கத்தியபடி வீடியோவில் தோன்றுகிறார். இந்த வீடியோவைப் பார்க்கும்போது கமல் உண்மையாகவே குழந்தையாக மாறி கத்திய உணர்வைத்தான் ஏற்படுத்துகிறது.

தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com