"தனுஷ் எனக்கு அப்பா மாதிரி" பெரிய ட்விஸ்ட் அடித்த விக்னேஷ் சிவன்..!

விக்னேஷ் சிவன் அளித்த பேட்டியின் பின்னணி என்ன?
vignesh sivan & Dhanush
vignesh sivan & DhanushTOI & Filmi Beat
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

நயன்தாராவுக்கும் தனுஷுக்கும் இடையில் கடந்த சில வருடங்களாக புகைச்சல் நிலவி வருவது அனைவரும் அறிந்தது தான்.நயன்தாராவின் காதல் கணவரான விக்னேஷ் சிவன், தனுஷ் எனக்கு அப்பா மாதிரி என்று கூறியது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு நயன்தாராவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 'நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடேல் ' என்ற ஆவணப் படம் உருவானது.

அந்த ஆவணப்படத்தில் நடிகர் தனுஷ் தயாரிப்பில் வெளியான , 'நானும் ரவுடி தான்' திரைப்படத்தின் சில வினாடி காட்சிகளை பயன்படுத்தி இருந்தனர். இதை அறிந்த நடிகர் தனுஷ் , தான் தயாரித்த திரைப்படத்திலிருந்து அனுமதி இன்றி காட்சிகளை பயன்படுத்தியதாக கூறி , 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தனக்கு வழங்க வேண்டும் என்று நயன்தாராவிற்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தார். அதிலிருந்து நடிகர் தனுஷிற்கும் நயன்தாராவிற்கும் இடையில் பனிப் போர் தொடங்கி இருந்தது.

நஷ்டஈடு வழக்கு தொடர்ந்ததற்கு பின்னர், தனுஷை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து நயன்தாரா ஒரு அறிக்கை விட்டிருந்தார். அந்த அறிக்கையில் , தனுஷ் தன்னையும் தன் கணவர் விக்னேஷ் சிவனையும் பழிவாங்குவதாக குறிப்பிட்டிருந்தார். தனுஷ் கூறுவதைப் போல் இல்லாமல், அவரிடம் தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக இரண்டு ஆண்டுகள் காத்திருந்தும் அவரிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை என்றும் நயன்தாரா கூறியிருந்தார்.

என் காதல் , திருமணம், என் வாழ்க்கை பற்றிய மிக முக்கியமான இந்த ஆவணப் படத்தில், எனது நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் , தானாக முன் வந்து கொடுத்த காணொளி காட்சிகளை மட்டுமே இணைத்துள்ளேன். வருந்தத்தக்க வகையில் 'நானும் ரவுடி தான் 'திரைப்படத்தின் காட்சிகள் அதில் இணைக்கப்படவில்லை என்று அறிவித்திருந்தார். இந்த மோதலுக்குப் பின்னர் பல நிகழ்ச்சிகளில் தனுஷ் மற்றும் நயன்தாரா பங்கேற்றாலும் ஒருவருக்கு ஒருவர் முகம் பார்த்துக் கொள்வதில்லை.

Nayanthara dhanush
Vignesh sivan Dhanush Nayaninstagram, AI

தற்போது தனுஷ் அரசியலில் இறங்குவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில் , விக்னேஷ் சிவன் யூடியூப் சேனலுக்கு நேர்காணல் வழங்கியிருந்தார். அதில் , "நான் தனுஷ் சாரை மிஸ் செய்கிறேன். சினிமாவில் அவரை போன்று வேலை செய்ய இன்னொருவர் பிறந்து வர வேண்டும். அவர் வேலை செய்யும் முறையினை பார்த்து , அவருக்கு ஏதேனும் ஆகிவிடுமோ? என்று கூட நான் பயந்திருக்கிறேன். மும்பையில் நானும் அவரும் ஒரே அறையில் தான் தூங்குவோம். அவர் அதிகாலை 5 மணி வரை ஏதேனும் வேலை செய்து கொண்டு இருப்பார்.

5 மணிக்கு படுக்க செல்லும் அவர் , ஆறரை மணிக்கு என்னை எழுப்பி விட சொல்லிவிட்டு தூங்குவார். ஆனால் , நான் எழுமுன்பே அவர் எழுந்து , நான் முன்னாடி போறேன் , நீ பின்னாடி வா என்று சொல்வார். அவர் ஒரு நாள் இரு நாள் இல்லை, தினமும் அப்படி தான் செய்வார். அவரைப் பார்த்தால் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும், தினமும் ஒருவரால் எப்படி இவ்வாறு உழைக்க முடியும்? அதனால் தான் அவர் தொட்டதெல்லாம் பொன்னாகிறது. அவர் எனக்கு அப்பா மாதிரி , அப்படி தான் என் மனதில் பதிந்து இருக்கிறார். அவர் மீது நான் வைத்துள்ள மரியாதை என்றும் போகாது" என்று கூறியிருந்தார்.

விக்னேஷ் சிவனின் இந்த பேச்சிற்கு பின்னர் நயன்தாரா மற்றும் தனுஷ் இடையேயான பனிப் போர் முடியுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

logo
Kalki Online
kalkionline.com