பிரபல தியேட்டருக்கு உரிமையாளராகும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி!

பிரபல தியேட்டருக்கு உரிமையாளராகும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

‘லேடி சூப்பர் ஸ்டார்‘ என்று அழைக்கப்படும் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்ததே. அதைத் தொடர்ந்து நயன்தாரா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த சினிமா ஜோடி சில மாதங்களுக்கு முன்பு திடீரென இரண்டை குழந்தைகளுக்குப் பெற்றோராகி சினிமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தனர்.

சமீப காலங்களாக இவர்கள் இருவரும் பல்வேறு முக்கியமான தொழில்களில் தங்களது முதலீடுகளைச் செய்து வருகின்றனர். அந்த வகையில் நயன்தாரா ஏற்கெனவே காஸ்மெட்டிக் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் தன்னுடைய முதலீட்டை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ‘தி ரௌடி பிக்சர்ஸ்’ என்ற பெயரில் இவர்கள் திரைப்படங்களையும் தயாரித்தும் வருகின்றனர். இதைத் தொடர்ந்து, தற்போது சென்னையின் மிகப் பழைமையான திரையரங்குகளில் ஒன்றான அகஸ்தியாவை இந்த ஜோடி தங்களது நண்பர்களுடன் இணைந்து விலைக்கு வாங்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதைத் தொடர்ந்து ராயபுரம் பகுதியில் இருக்கும் இந்த அகஸ்தியா தியேட்டரை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில மாதங்களில் அந்தத் திரையரங்கை புதுப்பொலிவுடன் திறக்க விக்னேஷ் சிவன் – நயன் ஜோடி திட்டுமிட்டு செயலாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. வடசென்னை பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய தியேட்டர்கள் எதுவும் இல்லை என்பதால், இவர்கள் இந்த தியேட்டரை வாங்கி பல புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com