‘வாரிசு’ படம் தயாராகாததால் விஜய் கோபம்!

‘வாரிசு’ படம் தயாராகாததால் விஜய் கோபம்!

ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் பிவிபி சினிமா தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம், ‘வாரிசு.’ நடிகர் விஜய் நடித்திருக்கும் இந்தப் படத்தை வம்சி இயக்கி உள்ளார். ரசிகர்கள் பெரும் பரபரப்போடு காணக் காத்திருக்கும் இது ஒரு எமோஷனல் திரைப்படம் என்றும், இந்தப் படத்தில் நடிகர் விஜய் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா நடித்துள்ளார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு மற்றும் சம்யுக்தா ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு முதல் முறையாக தமன் இசையமைத்திருக்கிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாளை காலை அதிகாலை நான்கு மணிக்கே இந்தத் திரைப்படத்தின் முதல் காட்சி திரையிடப்பட உள்ளது.

இந்த நிலையில், ‘வாரிசு’ திரைப்படத்தின் ப்ரிவியூ காட்சியை தனது மனைவி சங்கீதாவோடு கண்டு களிக்க மயிலாப்பூரில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தின் திரையரங்குக்கு வருகை தந்திருக்கிறார் நடிகர் விஜய். படம் திரையிடப்படும் நேரம் மற்றும் எப்போது திரையரங்குக்கு வந்தால் நன்றாக இருக்கும் போன்ற தகவல்கள் முன்னதாகவே நடிகர் விஜய்க்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படியேதான் நடிகர் விஜய்யும் அந்தத் திரையரங்குக்கு வருகை தந்திருந்தார். ஆனாலும், அவர் வந்து வெகு நேரமாகியும் படம் திரையிடப்படவில்லை.

அதற்காக காரணத்தை படக்குழுவினரிடம் நடிகர் விஜய் கேட்டபோது, “படத்தின் மிக்ஸிங் வேலைகள் இன்னும் முழுமை பெறவில்லை. அதனால் இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும்” என்று கூறியிருக்கிறார்கள். அதைக் கேட்ட நடிகர் விஜய், “சொன்ன நேரத்துக்கு நான் வந்துவிட்டேன். படத்தை இன்னும் ஏன் தயார் செய்யவில்லை” எனக் கேட்டு மிகவும் கோபப்பட்டு இருக்கிறார்.

அதன் பிறகு திரையரங்கிலேயே தனது மனைவியுடன் காத்திருந்த நடிகர் விஜய், படம் தயாராகி வந்ததும், அதை தனது மனைவியும் பார்த்துவிட்டு வீடு திரும்ப இரவு 8.30 மணியாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com