Thug life படத்திலிருந்து விலகிய பிரபலங்கள்… அந்த இடத்தில் யார் நடிக்கப்போகிறார்கள்?

Kamal and STR
Kamal and STR
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

மணி ரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் நடித்துவரும் thug life படத்திலிருந்து ஜெயம்ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் விலகியதாகச் செய்திகள் வந்துள்ளன. அந்த இடத்தில் வேறு பிரபல நடிகர்கள் நடிக்கப்போவதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக தக் லைஃப் படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வந்தன. அதன்படி த்ரிஷா தனது கதாபாத்திரத்தில் நடித்து முடித்துவிட்டதாக சினிமா வட்டாரத்தினர் கூறுகின்றனர். அந்தவகையில் முதலாவதாக தக் லைஃப் படத்திலிருந்து மலையாள நடிகர் துல்கர் சல்மான் விலகுவதாகச் செய்திகள் கசிந்தன. அவர் தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகவிருக்கும் புறநானூறூ படம் உட்பட பல படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். ஆகையால் பிஸி லைனப்பில் உள்ள துல்கருக்கு தக் லைஃப் படத்தில் நடிக்கப் போதிய நாட்கள் இல்லாததால் படத்திலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.

அடுத்ததாக ஜெயம்ரவியும் படத்திலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. ஏனெனில் ப்ரெதர், ஜீனி உட்பட இந்த ஆண்டு மட்டும் அவர் 4 படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். ஆகையால் தேதி கிடைக்காமல்தான் அவரும் விலகியதாகக் கூறப்படுகிறது.

இதுஒருபுறம் இருக்க, கமலஹாசன் அரசியல் வேலைகளில் மும்முரமாக உள்ளதால் நடிப்பதை சில காலம் ஒதுக்கிவைத்திருக்கிறார். அவர் தேர்தல் முடியும்வரை நடிக்கப்போவதில்லை என்றுக் கூறப்படுகிறது. ஆகையால் அவர் வருவதற்குள் மற்ற நடிகர்களை வைத்து முடித்துவிட வேண்டும் என்பது படக்குழுவின் திட்டம்.

அந்தவகையில் படத்திலிருந்து விலகிய நடிகர்களுக்கு பதிலாகப் புதிய நடிகர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆகையால் தற்போது துல்கர் சல்மானுக்கு பதிலாக சிலம்பரசன் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரை வைத்து ஏப்ரல் மாதம் இறுதிக்குள் சிம்புவின் போர்ஷனை முடிக்க படக்குழுத் திட்டமிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
பன்முக பாத்திரங்களில் பிரகாசிக்கும் 'பிரகாஷ் ராஜ்' - HBD!
Kamal and STR

மேலும் சிலம்பரசனின் 48வது படத்தை கமலஹாசன்தான் இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கானப் படப்பிடிப்பு மே மாதம் அல்லது ஜூன் மாதம் தொடங்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதேபோல் ஜெயம் ரவி இடத்தில் நிவின் பாலி அல்லது அரவிந்த் சாமி இருவரிடமும் படக்குழு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இவர்களில் யார் என்பது விரைவில் தெரியவரும். தற்போது STR அந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் பரவியதை அடுத்து இணையத்தில் கமலஹாசன் என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com