பட்டயக் கிளப்பி வரும் இலவச பஸ்கள்! விஜய் மாஸ்!

பட்டயக் கிளப்பி வரும் இலவச பஸ்கள்! விஜய் மாஸ்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

இன்று தளபதி விஜய் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் பரபரப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.

விஜய் பிறந்தநாளான இன்று லோகேஷ் கனகராஜ் ஒருபக்கம் லியோ அப்டேட் கொடுத்துவர, மறுபுறம் தமிழ்நாடு மட்டுமல்லாமல், உலகின் பல இடங்களில் இருக்கும் விஜய் ரசிகர்களும் விஜய் பிறந்தநாளை தங்கள் பங்குக்கு மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக, நேற்று முன்தினம், நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள NASDAQ இன் பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகளில் விஜய் படங்களின் சில போஸ்டர்கள் அடங்கிய வீடியோவை இடம்பெறச் செய்து, அங்குள்ள ரசிகர்கள் அதகளப்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில், தற்போது விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, கடலூரில் மேற்கு மாவட்ட மாணவரணி தலைமை சார்பாக, 'ஒரு நாள் இலவச பேருந்து' போஸ்டர் ஒட்டப்பட்ட ஒரு பேருந்து இன்று கடலூர் மாவட்டத்தில் இயங்கி வருகிறது. அதேபோல் கேரளாவிலும் விஜய் ரசிகர்களின் சார்பாக ஒரு பஸ்ஸில் இன்று ஒருநாள் இலவச பேருந்து இயக்கப்படுகிறது.

நடிகர் விஜய் தனது 49ஆவது பிறந்தநாளை இன்று, ரசிகர்களும் தங்கள் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும்விதமாக, பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து ஆச்சரியப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com