

ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா திருமணம் பிப்ரவரி 26ஆம் தேதி உதய்பூரில் நடைபெறுகிறது என்ற தகவல் வெளியானது முதல் திருமணம் குறித்து அறிந்து கொள்ள திரை ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
கன்னடப் பெண்ணான ராஷ்மிகாவின் துள்ளலான நடிப்புக்கும், அழகான உருவத்திற்கும் மயங்கி அவரைக் கொண்டாடுபவர்கள் ஏராளம். அதேபோல், தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் இயல்பான நடிப்பால் கவரப்பட்டு அவரது ரசிகர்களானவர்கள் பலர்.
இருவரும் முதன்முறையாகச் சேர்ந்து நடித்த 'கீதா கோவிந்தம்' (Geetha Govindam) படத்தின் மாபெரும் வெற்றி, இருவரையும் முன்னணி நட்சத்திரங்களாக மாற்றியது. அதனைத் தொடர்ந்து 'டியர் காம்ரேட்' (Dear Comrade) படத்தில் ஜோடியாக நடித்தனர். இதில் இவர்களின் எதார்த்தமான காதல் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. திரையில் இவர்களது 'கெமிஸ்ட்ரி' மிகச்சிறப்பாக அமைந்ததே இவர்களது காதல் வதந்திகளுக்குத் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.
குறிப்பாக ராஷ்மிகா நடித்த பல படங்கள் வரவேற்பைப் பெற்றதால் தமிழ் , தெலுங்கு, ஹிந்தி என இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இருவருமே தங்களுடைய பணிகளுக்கு இடையே கிடைக்கும் நேரத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளதால் அப்போது வெளியிடும் இருவரின் வெளிநாட்டு புகைப்படங்கள், குடும்ப நிகழ்ச்சிகளில் எடுத்த புகைப்படங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இருவரும் காதலில் விழுந்து விட்டதாக தகவல்கள் கசிந்தன.
காதல் வதந்திகள் அடிக்கடி வந்தாலும் தாங்கள் இருவரும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள் என ராஷ்மிகா அறிவித்து திருமணம் குறித்த தகவலை இருவரும் நீண்டகாலமாக உறுதிப்படுத்தாமலே இருந்தனர். திடீரென 2025 அக்டோபர் 3 அன்று இருவரின் திருமண நிச்சயதார்த்தம் இருவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு வீட்டாரும் மட்டுமே கலந்து கொண்டு விஜய் தேவரகொண்டா வீட்டில் நடைபெற்றதாகவும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திருமணம் நடைபெறும் என முடிவு செய்திருப்பதாகவும் தெலுங்கு ஊடகங்களில் வெளியாகி இருந்த தகவல் இருவரது திருமண செய்தியை உறுதி படுத்தியது.
இந்நிலையில் திரையுலக டாப் ஸ்டார்களான இவர்களது திருமணத்திற்கு திரையுலகை சேர்ந்த யாருக்கும் அழைப்பிதழ் தரவில்லை எனவும் திருமணம் நடக்கும் இடத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை எனவும் கூறப்படுகிறது.
சமீபகாலமாகப் பிரபலங்கள் தங்கள் திருமண அழைப்பிதழை ஒரு பரிசுப் பெட்டி போல (Gift Box) வழங்குவதைத் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த வரிசையில், தற்போது வைரலாகி வரும் விஜய் - ராஷ்மிகா திருமண அழைப்பிதழ் பெட்டியில் சில சுவாரஸ்யமான பொருட்கள் இடம் பெற்றுள்ளன:
பல வருடங்கள் முன்பே ஐஸ்வர்யா அபிஷேக் (Aishwarya Rai & Abhishek Bachchan) திருமண அழைப்பிதழ் பல gold-tone ஜெம்ஸ்டோன்கள் மற்றும் பல gift boxes கொண்டதாக வடிவமைக்கப்பட்டு பாராட்டு பெற்றது.
புகழ்பெற்ற ஜோடியான அனுஷ்கா சர்மா விராட் கோலி (Anushka Sharma & Virat Kohli)
இவர்களின் திருமண அழைப்பிதழ்களில் sapling (மரக்கன்று) சேர்த்து தனித்துவமான , மறக்கமுடியாத அழைப்புகளை அனுப்பி கவனம் பெற்றனர்.
விவேக் ஓபராய் பிரியங்கா (Vivek Oberoi & Priyanka Alva) “world’s most expensive wedding invite” எனப் பெயரிடப்பட்ட கலாச்சார அழைப்பிதழ்களுடன், கூட சில தனிப்பட்ட பரிசுப் பொருட்களும் சேர்த்து வழங்கினர்.
சமீபத்தில் Anant Ambani மற்றும் Radhika Merchant-இன் மிகப் பிரபலமான திருமண அழைப்பிதழ் பெட்டி 2024-இல் பேசுபோருளாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அழைப்பிதழ் ஒரு பெரிய ஆரஞ்சு நிற பெட்டியில் திறந்தவுடன் விஷ்ணு மந்திரம் ஒலித்து அழகான கடவுள் உருவங்கள் பதிக்கப்பட்டு திருமண நிகழ்ச்சி நிரல் அடங்கிய சிறப்பு “தங்க புத்தகம்” (Golden Book) உடன் பாரம்பரிய இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக இருந்தது.
தற்போது விஜய் - ராஷ்மிகா அழைப்பு பெட்டி வீடியோ வைரலாகியிருக்கிறது.அதில் இருவரது பெயர்கள் பொறிக்கப்பட்டு அதற்குள் மஞ்சள் நிற அமரில்லிஸ் மலர்கள் மற்றும் பிங்க் நிற பீஸ் லில்லிகள் இருக்கின்றன. மேலும், நேஷன் க்ரஷ் என எழுதப்பட்ட பர்ஃப்யூம், ரவுடி என எழுதப்பட்ட மஞ்சள் நிற டி- ஷர்ட், கை - கால்களில் தேய்க்கும் ஆயுர்வேத க்ரீம், முந்திரி பருப்பு கொண்ட சின்ன பெட்டியும் இருக்கின்றன. இந்தப் பொருள்களின் பின்னணி குறித்தும் விரைவில் சுவாரஸ்யமான தகவல்கள் வரலாம்.
முன்னதாக திருமண பத்திரிகையில் விஜய் தேவரகொண்டா, "எங்கள் வாழ்க்கையில் முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். எங்கள் குடும்பங்களின் ஆசீர்வாதங்களுடன் நானும், ராஷ்மிகாவும் 26ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவிருக்கிறோம். உங்கள் ஆசிர்வாதங்கள் எங்களுக்கு அர்த்தத்தை கொடுக்கும்" என எழுதியிருந்ததாக தெரிவிக்கும் தகவல்கள் குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்குப் பிறகு, மார்ச் 4-ம் தேதி ஹைதராபாத்தில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. திருமணத்தைத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் சமூக வலைதளங்கள் மற்றும் சினிமாப் பணிகளிலிருந்து விலகி இருக்க இந்த ஜோடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.