விஜய் தேவரகொண்டாவின் Family Star படத்தின் அப்டேட்?

Vijay Devarakonda's Family Star Movie Update.
Vijay Devarakonda's Family Star Movie Update.

விஜய் தேவரகண்டா நடிப்பில் உருவாகி வரும் Family Star படத்தின் அப்டேட் இன்று எந்த நேரத்திலும் வெளியாகும் என்ற தகவல் வெளியாகிவுள்ளது. இதனால் Family Star என்ற ஹேஷ்டேக் x தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

பரசுராம் இயக்கத்தில் தேவரகொண்டா நடிக்கும் Family Star படம் ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என்றிருந்த நிலையில், சில காரணங்களால் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டது. இப்படத்தின் இயக்குனர் பரசுராமின் முதல் படம் கீதா கோவிந்தம். இப்படத்திலும் விஜய் தேவரகொண்டாதான் கதாநாயகனாக நடித்திருப்பார். அதேபோல் ராஷ்மிகா மந்தன்னா கதாநாயகியாக நடித்திருப்பார். பரசுராம், விஜய் தேவரகொண்டா கூட்டணி வெற்றிபெற்ற நிலையில் மீண்டும் இப்போது இணைந்திருக்கிறார்கள். அதுவும் மிருணால் தாக்கூர் இப்படத்தில் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

'சீதா ராமம்' படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான மிருணால் தாக்கூர் சமீபத்தில் 'ஹாய் நானா' படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். தொடர்ந்து ஹிட் கொடுக்கும் படங்களில் நடிக்கும் இவரின் family star படத்திற்கும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. மேலும் இப்படத்தில் திவ்யன்ஷா கௌசிக், அஜய் கோஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இவர் விஜய் தேவரகொண்டாவின் 'கீதா கோவிந்தம்' மற்றும் 'உலகப் புகழ் பெற்ற காதலன்' படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். அதேபோல் Family star படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ மூன்று மாதத்திற்கு முன்னர் வெளியானது. இந்த டீசரில் விஜய் தேவரகொண்டாவின் ‘ என்னடா? இரும்ப வளைக்கனுமா’ என்ற வசனம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

இதையும் படியுங்கள்:
தயாராகும் சார்பட்டா 2.. தீவிர பயிற்சியில் ஆர்யா.. வைரலாகும் வீடியோ!
Vijay Devarakonda's Family Star Movie Update.

Family Star திரைப்படம் ஒரு காதல் மற்றும் குடும்பப் படமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் முழு படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முடிவடைந்தது. இப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என்று தகவல் பரவியது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று எந்த நேரங்களிலும் வெளியாகும் என்று செய்திகள் வெளியானது. இதனையடுத்து விஜய் தேவர்கொண்டா ஹேஷ்டேகும் Family star படத்தின் ஹேஷ்டேகும் X தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com