விஜய் தேவரகொண்டாவின் அடுத்தப் படத்தின் அப்டேட்!

V14 Team
V14 Team

Family star படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டா நடிக்கவிருக்கும் அடுத்தப் படத்தின் அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனால், தற்போது விஜய் தேவரகொண்டா என்ற ஹேஷ்டேக் X தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணால் தாக்கூர் நடித்து வெளியான Family star படம் ரசிகர்களிடைய ஓரளவு வரவேற்பைப் பெற்றது. குட் மற்றும் பேட் என இரண்டு விமர்சனங்களும் சமமாக வந்தன. பரசுராம் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்தது. இயக்குனர் பரசுராம், ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா வைத்து கீதா கோவிந்தம் படத்தை இயக்கினார்.

இப்படம் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா, இருவருக்குமே நல்ல வாய்ப்பாக அமைந்தது. பரசுராம் மற்றும் விஜய் தேவரகொண்டா கூட்டணி நல்ல வெற்றியை பெற்றதையடுத்து மீண்டும் family star படத்திலும் இணைந்தார்கள். அதேபோல் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைத்தார். இவர்தான் விஜய் தேவரகொண்டாவின் கீதா கோவிந்தம் மற்றும் உலக புகழ்பெற்ற காதலன் ஆகிய படங்களுக்கும் இசையமைத்தார்.

Family Star படம் ஓடிடி தளத்தில் வெளிவந்ததையடுத்து, படத்தில் சில வசனங்கள் வைரலாகி வந்தன. இதனையடுத்து தற்போது விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படம் விஜய் தேவரகொண்டாவின் 14வது படமாகும். இப்படத்தை ரவி கிரண் கோலா இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன்னர் 2019ம் ஆண்டு ‘ராஜா வாரு ரானி காரு’ என்ற தெலுங்கு படத்தை இயக்கினார். அதன்பின்னர் ஒரு படத்தில் எழுத்தாளராக மட்டும் பணியாற்றினார்.

இது விஜயும் கிரணும் இணையும் முதல் படமாகும். மேலும் பெயரிடப்படாத இந்த V14 படம், கிராமத்து கதைக்களம் கொண்ட படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. விஜய் தேவரகொண்டா ஒரு கிராமத்து படத்தில் நடிக்கவுள்ளது இதுவே முதல் முறையாகும். இப்படத்தை ராஜு – ஷிரிஷ் ஆகியோர் இணைந்துத் தயாரிக்கவுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம் - அரண்மனை 4 - இது 'பழைய பல்லவி பாடும்' பேய் இல்லை… அதுக்கும் மேல! 
V14 Team

இப்படத்தைப் பற்றிய அறிவிப்பை இயக்குனர் கிரண் X தளத்தில் அறிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு மே 9ம் தேதி வெளியாகும் என்றும் கூறியுள்ளார். விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாள் தினமான மே 9ம் தேதி, ஒரு சூப்பர் அறிவிப்பு வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com