ஒரு கோடியில் ரஜினியை மிஞ்சிய விஜய்... ரசிகர்கள் அதிர்ச்சி!

Jana nayagan vs coolie
Jana nayagan vs coolie
Published on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமைக்கான தொகையை விட ஒரு கோடி ரூபாய் அதிகமாக ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி பிசினஸ் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி கோட் படத்துக்கு பின்னர் விஜய் தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அவரது சினிமா கெரியரில் ஜனநாயகன் கடைசி படமாக அமைய உள்ளது. இந்த படத்தை எச்.வினோத் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை கர்நாடகாவை சேர்ந்த கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். வில்லன் கேரக்டரில் இந்தி நடிகர் பாபி தியோல் இடம் பெற்றுள்ளார். இவர்களை தவிர்த்து பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் இடம்பெற்றுள்ளனர். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதேபோன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். சத்யராஜ், நாகார்ஜுனா, சுருதி ஹாசன் உள்ளிட்டோரும் கூலி படத்தில் இடம்பெற்றுள்ளனர். 'ஜனநாயகன்' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக கூலி திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓடிடி உரிமத்தை பொறுத்தளவில் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளம் சுமார் ரூ. 120 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோன்று 'ஜனநாயகன்' படத்தை அதே அமேசான் ஓடிடி தளம் ரூ. 121 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த இரண்டு தகவல்களும் உறுதி செய்யப்பட்டால், ரஜினியின் படத்தைவிட ஒரு கோடி ரூபாய் அதிகமாக விஜய்யின் படம் ஓடிடி பிசினஸ் செய்துள்ளது என்பதும் உறுதி செய்யப்படும்.

அந்த வகையில் டிஜிட்டல் ஒளிபரப்பு வர்த்தகத்தில் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் ரஜினியின் 'கூலி' படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளதாக கூறப்படுகிறது. வெகு விரைவில் 'கூலி' படத்துடைய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை அமேசான் நிறுவனம் வாங்கியிருந்தாலும், எட்டு வாரங்கள் கழித்து மட்டுமே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
குக்வித் கோமாளி சீசன் 6-இல் புதிய ட்விஸ்ட்.. இவரா கோமாளி? ரசிகர்கள் குஷி!
Jana nayagan vs coolie

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com