விஜய் சேதுபதி - சாய் நடித்துள்ள 'பத்தா' விமர்சனம்: பயம் கலந்த சிரிப்பு விருந்து!

பாத்ரூமில் மாட்டிக்கொள்ளும் ரவுடி; தப்பிக்க வைக்கும் சிறுவன் - பாலாஜி தரணிதரனின் கலக்கல் சினிமா!
பத்தா விமர்சனம்
பத்தா விமர்சனம்
Updated on: 
ரேட்டிங்(3.5 / 5)

பத்தா விமர்சனம்

வில்லன் ஒரு பெரிய ரவுடி, ஊரே அவனைப் பார்த்து பயப்படுது. அடிதடி, வெட்டுக்குத்து, கள்ளச்சாராயம் இவை தான் வில்லனின் தொழில். வில்லனுக்கு ஒரு மனைவியும், டீன் ஏஜ் மகளும் உண்டு.

நாயகன் ஸ்கூலில் படிக்கும் ஒரு சிறுவன். வில்லனுடைய பராக்கிரமங்களை எல்லாம் ஊரார் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறான். வில்லன் மீது ஒரு பயம் கலந்த மரியாதை உண்டு. நேரிலும் வில்லன் செய்யும் கொடூர சம்பவங்களைப் பார்த்து பயந்தவன்.

ஒரு நாள் நாயகன் படிக்கும் பள்ளிக் கூடத்தில் யாரும் பயன்படுத்தாத பாத்ரூம்ல வில்லன் இருக்கும்போது தெரியாத்தனமாக நாயகன் வெளிப்பக்கமாகத் தாழிட்டு விடுகிறான்.

ஊரே பார்த்து பயப்படும் தன்னை யார் இப்படி சிறைப்படுத்தியது என்று வில்லனுக்குத் தெரியவில்லை. கத்துகிறான், கதறுகிறான். ஆனால் யாரும் உதவிக்கு வர வில்லை.

நாயகனுக்கு வில்லனை விடுவிக்க பயம். வெளியே வந்தால் தன்னை அடையாளம் கண்டு கொண்டு பழி வாங்கி விடுவான் என பயப்படுகிறான். அதனால் தன் சக்திக்குத் தகுந்தபடி தினசரி பிஸ்கெட் மட்டும் தருகிறான்.

வெளியே ஒரு கட்டத்தில் வந்த வில்லன் தன்னை அடைத்தது யார்? என்பதைக் கண்டு பிடிக்க முயற்சிக்கிறான். நாயகன் வில்லனிடம் மாட்டாமல் தப்பித்தானா? என்பது தான் மீதித் திரைக்கதை.

வில்லனாக விஜய் சேதுபதி. பிரமாதமாக நடித்திருக்கிறார். எமோஷனல் சீன்களிலும் மனம் கவர்கிறார்.

பத்தா விமர்சனம்
பத்தா விமர்சனம்

நாயகனாக, சிறுவனாக நடிகர் சாய். இந்த ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது உறுதி. மொத்தப் படத்தையும் தன் நடிப்பால் தாங்குகிறான். விஜய் சேதுபதி படத்தில் அவரை விட வெய்ட்டான கேரக்டர் ஒரு சிறுவனுக்கு என்பதையே நம்ப முடியவில்லை. பல இடங்களில் கை தட்ட வைக்கும் அட்டகாசமான நடிப்பு.

வில்லனின் மனைவியாக லிஜோ மோல் ஜோஸ் அதிக வாய்ப்பில்லை என்றாலும் வந்த வரை ஓக்கே. கண்களிலேயே நடிப்பைக் கொண்டு வருகிறார். வித்தியாசமான ஒரு கேரக்டரில் சாந்தி பாலச்சந்திரன் நடிப்பும் குட். ஹரிகிருஷ்ணன், வில்லனின் மகளாக வரும் சஹஸ்ரஸ்ரீ, வித்தியாசமான அசிஸ்டெண்ட்டாக வரும் விஷ்ணு கோவிந்த் அனைவரின் நடிப்பும் அருமை.

ஒளிப்பதிவு செல்வக்குமார். 1980ஸ் கால கட்டத்து கலர் டோனில் கலக்குகிறார். சாய் அபயங்கர் இசையில் இரு பாடல்களும் கேட்கும் தரத்தில் இருக்கின்றன. செல்லமே மகளே பாட்டு செம. பின்னணி இசை ஓக்கே ரகம்.

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், சீதக்காதி ஆகிய படங்கள் இயக்கிய பாலாஜி தரணி தரன் தான் இதன் இயக்குநர்.

சபாஷ் டைரக்டர்

1. ட்ரெய்லரில் ஏதோ மாமூல் கேங்க்ஸ்டர் மசாலா போல் சில காட்சிகளைக்காட்டி விட்டு, படத்தில் பிரமாதமான காமெடி, எமோஷனல் சீன்களை எடுத்த விதம் அருமை.

2. பாத்ரூமில் மாட்டிக்கொண்ட வில்லன் முதலில் பில்டப் கொடுப்பதும், ஒரு கட்டத்தில் தான் வெளியே வர முடியாமலேயே போய் விடுவோமோ,  மனைவி, மகளைப் பார்க்கவே முடியாதோ என்று நினைத்து அழுவது உருக்கமான நடிப்பு.

3. நாயகன், வில்லன் இருவருக்குமான காம்பினேஷன் காட்சிகள் பிரமாதம். இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர். ஒரு சிறுவனுக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் விஜய் சேதுபதி நடித்ததே பெரிய விஷயம்.

4. ஒரே சிச்சுவேஷன் காமெடி ரிப்பீட்டாகக் காட்டிக் கைதட்டல் வாங்கும் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் பட ரகக்காமெடி இதிலும் ரசிக்க வைக்கிறது.

5. எந்த ஒரு ரவுடியிடமும் குழந்தைத்தனம் இருக்கும். அதை வெளிப்படுத்தும் விதமாய்க் காட்சிகள் அமைத்த விதம் அருமை.

பத்தா விமர்சனம்
பத்தா விமர்சனம்

6. நாயகனின் வருகைக்குப்பின் வில்லனின் வாழ்க்கையில், நடத்தையில் ஏற்படும் படிப்படியான மாற்றங்களைக்காட்டிய விதம் பிரமாதம்.

7. டைட்டில் போடும்போது ஒரு கதவு உருவாகும் காட்சியை. விவரமாகக்காட்டி விட்டு மெயின் கதைக்கும், அந்தக்காட்சிக்கும் தொடர்புபடுத்தும் ஐடியா சூப்பர்.

8. நாயகன் ஒவ்வொரு பிரச்சனைகளிலும் சிக்குவது, அதிலிருந்து வெளியே வருவது அனைத்தும் அருமை.

இதையும் படியுங்கள்:
பார்வதி திருவோத்தின் த்ரிஷ்யம் பாணி த்ரில்லர் திரைப்படம் 'பிரதம திரிஷ்டியா குட்டக்கர்' ஜெயித்ததா?
பத்தா விமர்சனம்

9. நாயகனிடம் எதுக்கு தம்பி அங்கே போனே? என்று ஒவ்வொருவராகக் கேட்க அந்தக் காமெடி டிராக் நன்கு ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

10. படத்தின் இண்ட்டர்வெல் பிளாக், க்ளைமேக்ஸ் சீன் இரண்டும் அருமை.

11. வில்லன் எதற்காக பாத்ரூம் போனான் என்ற காரணம் வெளியாகும் சீன் வெடிச்சிரிப்பு.

ரசித்த வசனங்கள்

1. ஒரு விஷயம் நம் அருகில் இருக்கும் வரை அதன் அருமை நமக்குத் தெரியாது. நம்மை விட்டுப்போனால் தான் தெரியும்.

2. ஒவ்வொருவருக்கும் குடும்பம் இருக்கிறது. அடுத்தவனுக்கு பயத்தைக்காட்ட வேண்டும் என்று நினைத்து ஒருவனை அடிப்பது கேவலமான முட்டாள் தனம்.

3. எல்லாரும் அவரைக்கண்டா பயப்படுவாங்க, ஆனா அவர் எதுக்கும் பயப்பட மாட்டார்.

4. ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் உன்னை அவங்க வெச்சு செய்யாமயா இருப்பாங்க?

5.  அன்பே! ஆருயிரே! மத்தவங்கதான் என்னைப்பார்த்து பயப்படனும். நீ பயப்படக்கூடாது, புரியுதா?

இல்ல, நீ பாடலைன்னா பயப்பட மாட்டேன்.

6. இரண்டு நாட்களாக நான் மட்டும் தான் பேசிட்டு இருக்கேன்.

இதையும் படியுங்கள்:
விஜய் மகனுக்கு செக் வைக்கும் விஜய் சேதுபதி..! - காந்தி ஜெயந்தி ரிலீஸில் ஜெயிக்கப்போவது யாரு..?
பத்தா விமர்சனம்

லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. வித்தியாசமான இந்தக் கதையில் வில்லனின் மோசமான பக்கங்களைக் காட்டிய விதம் மிகவும் க்ளிஷேவாக இருந்தது. இதிலும் வித்தியாசத்தைக் காட்டி இருக்கலாம்.

2. கதைக்குள் செல்ல மலையாளப்படங்கள் போலவே முதல் 30 நிமிடம் எடுத்துக் கொள்கிறார்கள்.

3. தேவை இல்லாத அந்த கானாப்பாட்டு எதற்கு?

4. பிஜிஎம் மில் சில இடங்களில் சூர்யா நடித்த ரெட்ரோவின் பாதிப்பு இருக்கிறது.

5. மலையாளப்படங்கள் பார்த்துப்பழக்கமானவர்களுக்கு மட்டுமே இதன் மெதுவான திரைக்கதை அமைப்பு பிடிக்கும்.

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். -க்ளீன் யு

கல்கி கமெண்ட் - குடும்பத்துடன் பார்க்கத் தகுந்த ஒரு ஜாலியான காமெடிப்படம். டோண்ட் மிஸ் இட்.

விஜய் சேதுபதி மற்றும் சிறுவன் சாயின் அசாத்திய நடிப்பில், எமோஷன் மற்றும் காமெடி கலந்து குடும்பத்தோடு ரசிக்கும்படியான ஒரு தரமான என்டர்டெய்னரை இந்தப் படம் வழங்குகிறது.

logo
Kalki Online
kalkionline.com