தமிழ் சினிமாவில் தன் இயல்பான நடிப்பினாலும், மாறுபட்ட கதைக்களங்களில் நடித்து பெயர் பெற்றவர் விஜய் சேதுபதி. அவருக்கு மற்ற நடிகர்களுக்கு கிடைக்காத ஒரு சர்வதேச சிறப்பு அந்தஸ்து கிடைத்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மாநகரில் , நவம்பர் 23-ஆம் தேதி நடைபெறும் 54-வது சர்வதேச எம்மி விருது விழாவில், விருதுகளை வழங்கி கௌரவிக்கும் முக்கிய பிரசன்டராக விஜய் சேதுபதி பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஒரு இந்திய நடிகர் முக்கிய பிரதான விருதாளராக பங்கு பெறுவது பெருமை சேர்ப்பதாக இருக்கும்.
விஜய் சேதுபதிக்கு இந்த பெருமைமிகு கௌரவம் கிடைப்பதற்கு காரணமாக ஒரு பெண்மணியும் இருக்கிறார். சர்வதேச தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமியின் நிர்வாக வாரிய உறுப்பினரும் , பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான கவிதா குப்தா இதன் பின்னணியில் இருக்கிறார். இதற்கு முன்னர் 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச எம்மி விருதுகள் விழாவை பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனான வீர் தாஸ் தொகுத்து வழங்கியிருந்தார்.
அப்போது வீர் தாஸ் தேர்வு செய்ததில் கவிதா குப்தாவின் பங்கு குறிப்பிடத் தகுந்தது. இதன் மூலம் தமிழ் நடிகர் ஆன விஜய் சேதுபதிக்கு சர்வதேச அளவில் அறிமுகமும் அங்கீகாரமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.நடிகர் விஜய் சேதுபதி அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புடன் தனது பணிகளை செய்வார் என்று தமிழ் சினிமா உலகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே விஜய் சேதுபதிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனுபவம் உள்ளது.
தற்போது விஜய் சேதுபதியின் திரைப்படங்களும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகின்றன. அது மட்டுமல்லாமல் விரைவில் வெளிவர உள்ள ,அவரது நடிப்பில் உருவான திரைப்படங்களும் ஏற்கனவே அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய விஜய் சேதுபதி நடித்திருந்த பத்தா திரைப்படம் , தற்போது ஓடிடி தளத்திலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.
இத்துடன் இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள 'இஞ்சி வெல்லம்' திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. முதல்முறையாக விஜய் சேதுபதியும் சாய் பல்லவியும் இணைந்திருக்கும் இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை தாண்டி தியாகராஜன் குமாரராஜா இயக்கும் 'பாக்கெட் நாவல்' திரைப்படத்திலும் விஜய் சேதுபதி மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதி எம்மி விருது வழங்கும் விழாவில் அறிமுகமாகும் தருணத்தில் , அவரது நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற மகாராஜா திரைப்படமும் ஹாலிவுட் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதியின் 50 வது திரைப்படமான மகாராஜா தமிழ்நாடு மட்டுமின்றி சீனாவிலும் குறிப்பிடத் தகுந்த வெற்றியை பெற்றிருந்தது. அதன் காரணமாக சர்வதேச அறிமுகம் அந்த திரைப்படத்திற்கு கிடைத்திருந்தது. மேலும் மகாராஜா திரைப்படம் விஜய் சேதுபதியை அதிகாரப்பூர்வமாக 100 கோடி ரூபாய் மார்க்கெட் உள்ள நடிகர்கள் பட்டியலில் இணைத்தது. தற்போது விஜய் சேதுபதியின் ரசிகர்கள் விரைவில் அவரை எம்மி மேடையில் காண ஆவலாக உள்ளனர்.