தளபதி 68
தளபதி 68

தளபதி 68 டைட்டில் இதுதான்? பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்திற்கு 'பாஸ்' என பெயரிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், தயாரிப்பாளர் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 68 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த மாதம் லியோ படம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இதனையடுத்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெவ்வேறு ஜானரில் படங்களை இயக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. அஜித்தை வைத்தும் 'மங்காத்தா' என்ற பிளாக் பஸ்டர் ஹிட்டை கொடுத்தார். சமீபத்தில் சிம்புவை மாநாடு படத்தில் கம்பேக் கொடுக்க வைத்து ஹிட் அடித்தார். இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

இதையும் படியுங்கள்:
விஜய்யின் 68வது படத்தின் டைட்டில் என்ன? லீக்கான பெயர்!
தளபதி 68

இதன் படப்பிடிப்பு 'லியோ' ரிலீசுக்கு பின்பாக துவங்கி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இப்படத்தின் ஷுட்டிங் தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது. படத்தின் முக்கியமான ஆக்ஷன் மற்றும் கார் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டது. தாய்லாந்த் ஷெட்யூலை நிறைவு செய்து விட்டு, நடிகர் விஜய் சென்னை திரும்பிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

தளபதி 68 ஃபர்ஸ்ட் லுக் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகும் என சொல்லப்பட்டது. இப்படத்தில் டீஏஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் விஜய்யின் பழைய தோற்றத்தைப் பயன்படுத்தியுள்ளதாகவும், பகவதி, யூத் படத்தில் இருந்த விஜய் தோற்றம் இப்படத்தில் 10 நிமிட காட்சியாக இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் பெயர் பாஸ் என்றும் பஸ்ஸுல் என்றும் பலரும் தெரிவித்து வந்த நிலையில், தயாரிப்பாளர் அதற்கு விளக்கமளித்துள்ளார். அதில், இந்த 2 பெயருமே இல்லை, வெங்கட்பிரபு சிறப்பான ஒன்றை வைத்திருக்கிறார். நேரம் வரும் போது தெரியவரும். அது வரை காத்திருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com