ரசிகர்களால் தளபதி என்று அழைக்கப்படும் விஜய் தன்னுடைய அரசியல் பிரவேசத்தை அறிவித்த பின்பு பல விமர்சனங்கள் எழுந்தன. அத்துடன் 'ஜனநாயகன்' படத்திற்குப் பிறகு, தான் சினிமாவில் இருந்து விலகுவதாகவும் இதுதான் கடைசி படம் என்றும் விஜய் அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.
தொலைக்காட்சி தொகுப்பாளரான VJ ஆதவன் சமீபத்திய பேட்டியில் "விஜய் பற்றி பேசினால் அவர் படத்துல வாய்ப்பு வராது என்ற பயத்தில் பேசாமல் இருப்பார்கள். ஆனால் அவர் சொல்லிவிட்டார் கடைசி படம் என்று. அப்படியே திரும்பி நடிக்க வந்தாலும் ஏன் மறுபடியும் நடிக்க வந்தேன்னு அவர் பதில் சொல்லணும். எப்படியும் 2027ல் கண்டிப்பாக நடிக்க வருவார்.... வந்துவிட்டு ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நடிக்க வந்தேன் என்று சொல்வார்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த தகவல்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும் ஆதவனுடைய கருத்து ரசிகர்களிடையே பெருத்த நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. 'ஜனநாயகன்' தான் விஜய்யின் கடைசி படமா? திரும்ப வருவாரா? என்று ரசிகர்களிடையே பலத்த கேள்விகள் இருந்து கொண்டிருந்த சமயத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளரின் கருத்துக்கள் இணையத்தை கலக்கி கொண்டிருக்கின்றது.
நடிகரும், சினிமா விமர்சகருமான ஆதவன், நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் மற்றும் எதிர்காலம் குறித்து மிகத் தீவிரமான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். நல்ல காரியங்களை செய்பவர்கள் என்றுமே விளம்பரத்தை(publicity) நாட மாட்டார்கள் என்று கூறிய அவர், நடிகர் விஜய் 2027ல் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வருவார் என்று அதிரடியாகக் கூறியுள்ளார்.
இன்று வரை கலெக்ஷன் அதிகம் கொடுக்கக்கூடிய ஹீரோக்களில் விஜய்யும் ஒருவர். மக்களுக்குப் பிடித்த மாதிரி படங்களைத் தரும் விஜய் மீண்டும் நடிக்க வருவார் என்ற ஆதவனின் கருத்து ரசிகர்களை மிகவும் குஷிப்படுத்தி உள்ளது.