விதைக்கப்பட்டார் விஜயகாந்த்.. பிரியா விடை கொடுத்த மக்கள்!

விதைக்கப்பட்டார் விஜயகாந்த்
விதைக்கப்பட்டார் விஜயகாந்த்
Published on

கேப்டன் எனும் சகாப்தம் மக்கள் மனங்களை சுக்கு நூறாக நொறுக்கி மண்ணில் விதைக்கப்பட்டது.

கேப்டன் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் நேற்று காலை உடல்நலக்குறைவால் மருத்துவமனையிலேயே காலமானார். பல ஆண்டு காலமாகவே உடல்நிலை மோசமடைந்து காணப்பட்டாலும் என்றாவது ஒரு நாள் எழுந்து வந்துவிடுவார் என்றே மக்கள், நண்பர்களும், தொண்டர்களும் நம்பி கொண்டிருந்தனர்.

ஆனால் அனைவரின் நம்பிக்கையும் உடைத்தது அவரின் தோற்றம், மாநாடு, பிறந்தநாள் கூட்டம் என அனைத்திற்கும் சக்கர நாற்காலியில் அமர்த்திய படி அழைத்து வரப்பட்டார். கையே தூக்க முடியாத நிலையை கண்டு மக்களும் உடைந்து அழுதனர். ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கை, ஏனென்றால் கர்ஜனை சிங்கத்திற்கு சமமானவர் விஜயகாந்த். அப்படி இருக்கையில் எப்படி இது போன்று ஆகிறார் என மக்கள் நினைத்ததுண்டு.

தொடர்ந்து சமீபத்தில் நடந்த மாநாட்டில் கீழே விழ முற்பட்ட காட்சிகள் கண்களை குளமாக்கியது. ஆனாலும் உலகை விட்டு பிரிய போகிறார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. டிசம்பர் 28 வந்தது. பேரதிர்ச்சியும் வந்தது. கேப்டன் விஜயகாந்த் காலை 6 மணிக்கு உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது. மக்களோ அலைகடலென திரண்டு விஜயகாந்தை காண ஓடோடி வந்தனர். கடைசி வரை அவரின் குரலை கேட்கவே இல்லை என்பதே இங்கு பலரின் வருத்தமாகும். அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவனே என்ற அவரின் பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போலவே வாழ்ந்து மறைந்தார்.

கால் கடுக்க நின்ற கோடிக்கணக்கான மக்களின் கண்ணீர்களுக்கு நடுவே தேமுதிக அலுவலகத்தில் சந்தன் பேழைக்குள் துயில் கொண்டார். தொடர்ந்து அவரின் சந்தன பேழையை புதைத்தனர். பொதுமக்களும் கண்ணீருடன் விஜயகாந்திற்கு பிரியாவிடை கொடுத்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com