வீடு திரும்பினார் விஜயகாந்த்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

விஜயகாந்த்
விஜயகாந்த்
Updated on

தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2 வார சிகிச்சைக்கு பிறகு இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தமிழ் சினிமா ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாத ஒரு நடிகர் மற்றும் அரசியல் பிரபலம் என்றால் அது விஜயகாந்த் தான். ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த நடிகர் விஜயகாந்த் பல வருடங்களாகவே உடல் நிலை மோசமாகி வீட்டிலேயே முடங்கியுள்ளார். ஆண்டுதோறும் அவரின் பிறந்த நாளன்று ரசிகர்களை சந்திப்பார்.

இந்த நிலையில், மார்பு சளி, இடைவிடாத இருமல் காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த மாதம் 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதன் காரணமாக உடல்நிலை மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை துல்லியமாக கண்காணிப்பதற்காக ஐசியூவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மேலும் நுரையீரல் சளி பாதிப்பை சீர் செய்வதற்கான சிகிச்சையும் வழங்கப்பட்டது. அவ்வப்போது மூச்சுவிடுவதில் லேசான சிரமம் இருப்பதால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது. பல வதந்திகள் பரவி கொண்டே இருந்ததால் சமீபத்தில் பிரேமலதா விஜயகாந்த், கணவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து தலைவர் நன்றாக இருக்கிறார், விரைவில் குணமடைவார் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் விஜயகாந்த் அவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக மருத்துவமனையில் இருந்து அறிக்கை வெளிவந்துள்ளது.

விஜயகாந்த் டிஸ்சார்ஜ்
விஜயகாந்த் டிஸ்சார்ஜ்

இதனை பார்த்த ரசிகர்கள் காலையில் வந்த சந்தோஷமான விஷயம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News

Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook

Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram

Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter

Add KalkiOnline as a preferred source on Google... Click Here

logo
Kalki Online
kalkionline.com