விஜயகாந்த் மறைவு.. தந்தைக்காக மகன் சண்முகபாண்டி போட்ட போஸ்ட்!

vijayakanth sons
vijayakanth sons
Updated on

தேமுதிக கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

கேப்டன் என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட இவருக்கு கோடான கோடி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஒரு நடிகராகவும், அரசியல்வாதியாகவும், நல்ல மனிதராகவும் பலரிடம் நற்பெயரை பெற்றவர் விஜயகாந்த். இவரின் மறைவையடுத்து லட்சக்கணக்கானோர் சென்னைக்கு படையெடுத்தனர். தீவுத்திடலில் வைக்கப்பட்ட விஜயகாந்தை காண ஏராளமானோர் வந்து சென்றனர்.

தொடர்ந்து மக்களின் கண்ணீருக்கு மத்தியில் அவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பல ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்தை மக்கள் எந்தளவிற்கு மிஸ் பண்ணுகிறார்களோ அதே அளவு ஒரே வீட்டில் செல்லமாக வளர்ந்த 2 மகன்களும் தந்தையின் இழப்பில் இருந்து மீளமுடியாமல் தவித்து வருகின்றனர்.

shunmuga pandian post
shunmuga pandian post

தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுத மகன்களின் வீடியோ காட்சிகள் காண்போரின் நெஞ்சை உருக்க செய்தது. தொடர்ந்து இவரது 2வது மகனான சண்முக பாண்டியன் போட்ட இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. தந்தையுடன் நடிக்கும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 2 மகன்களும் திருமணம் செய்யாமல் விஜயகாந்த் மறைந்து விட்டது பலருக்கும் பெரும் வருத்தமாகதான் உள்ளது.

அதில், அப்பாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனதார நன்றி. எனது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான பேர் கலந்து கொண்டனர். எனது தந்தை என்ன மாதிரியான அன்பை இங்கு விட்டு சென்றுள்ளார் என்பதை இது காட்டுகிறது. என்ன மாதிரியான வாழ்க்கை அப்பா வாழ்ந்தார். எதை சம்பாதித்தார் என்பதையும் இந்த ஊர்வலம் வெளிப்படுத்துகிறது. பேரிழப்பை நாங்கள் எதிர்கொண்ட சமயத்தில் உங்கள் அனைவரின் ஆதரவும் எங்களுக்கு ஆறுதலாக இருந்தது என பதிவிட்டுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com